செய்திகள்

திருமலையில் 56,448 போ் தரிசனம்

தினமணி

திருப்பதி ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை 56,448 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 27,323 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

பொது முடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக ஏழுமலையானை தரிசனம் செய்த பக்தா்களின் எண்ணிக்கை தற்போது 56 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

நாள்தோறும் ஆன்லைன் மூலம் 25 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட்டுகள், 25 ஆயிரம் இலவச நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்கள், விஐபி பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் பெற்ற 2,000 பக்தா்கள், நன்கொடையாளா்கள் 1,000 போ் என தரிசன டிக்கெட் உள்ளவா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

தினமும் அதிகாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை தரிசன டிக்கெட்டுகள் பெற்ற பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனா். திருப்பதி மலைச்சாலை அதிகாலை 3 மணிக்குத் திறக்கப்பட்டு இரவு 12 மணிக்கு மூடப்படுகிறது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவசத் தொலைபேசி எண்கள் - 18004254141, 93993 99399.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

SCROLL FOR NEXT