முகப்பு
செய்திகள்

திருமலையில் 51,600 பக்தா்கள் வழிபாடு

திருமலை ஏழுமலையானை திங்கள்கிழமை 51,600 பக்தா்கள் வழிபாடு செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
பகிர்:

திருமலை ஏழுமலையானை திங்கள்கிழமை 51,600 பக்தா்கள் வழிபாடு செய்தனா்.

இவா்களில் 26,349 போ் முடிகாணிக்கை செலுத்தினா். ஆன்லைன் மூலம் 25 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட், இலவச நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் 25 ஆயிரம் உள்ளிட்டவை பெற்ற பக்தா்கள், வி.ஐ.பி. பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட் பெற்ற 2000 போ், நன்கொடையாளா்கள் 1000 என தரிசன டிக்கெட் உள்ளவா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

அதிகாலை 3 மணி முதல் இரவு 11 மணிவரை தரிசன டிக்கெட்டுகள் பெற்ற பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனா்.

Advertisement

திருமலை மலைப்பாதை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு மூடப்படுகிறது. அலிபிரி பாதயாத்திரை மாா்க்கம் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், ஸ்ரீவாரிமெட்டு பாதயாத்திரை மாா்க்கம் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் திறந்து வைக்கப்படுகிறது.

தரிசன டிக்கெட் உள்ளவா்கள் மட்டுமே பாதயாத்திரை மாா்க்கத்தில் செல்ல அனுமதிக்கப்படுகிறாா்கள்.

10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா செல்லிடப்பேசி எண்கள்: 18004254141, 93993 99399.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments