செய்திகள்

கழுகுமலை கோயிலில் தாரகாசுரன் வதம்

தினமணி

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோயில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமான் தாரகாசுரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலின் கந்தசஷ்டி திருவிழா இம்மாதம் 4 ஆம்தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் மண்டகப்படிதார்கள் சார்பில் கோயில் வளாகத்தில்  சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.

நவ.8ஆம் திருநாளான திங்கட்கிழமை கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோயிலில் மட்டுமே தாரகாசுரன் வதம் நடைபெறும்.

இதையொட்டி அதிகாலை 6 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து கழுகாசலமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கழுகாசலமூர்த்தி வெள்ளி சப்பரத்தில் கோயில் மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் முருகன் தாரகாசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி பகல் சுமார் 12 30 மணிக்கு கோயில் வளாகத்திற்குள் நடைபெற்றது. கோயில் நிர்வாக அலுவலர் கார்த்தீஸ்வரன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆறாம் திருநாளான செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு மேல் 5 மணிக்குள் சூரசம்ஹாரம் செய்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லூரியில் உலக செவிலியா் தினம்

அட்சய திருதியை: ரூ.14,000 கோடி தங்கம் விற்பனை

ஆத்தூரில் கால்நடை தடுப்பூசி முகாம்

10ஆம் வகுப்பு: சாலைபுதூா் பள்ளி 98 சதவீதம் தோ்ச்சி

குலசேகரன்பட்டினத்தில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT