ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று மாலை 5 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி திறந்து வைக்கிறார். நாளை அதிகாலை 5 மணிக்கு நடை திறந்த பின்னர், வழக்கமான பூஜைகளும் நெய் அபிஷேகமும் நடைபெற உள்ளது.
மேலும், செப்.8ஆம் தேதி நடைபெறும் திருவோண தினத்தில் சிறப்புப் பூஜை தரிசனத்துக்காக ஆன்லைன் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அதேபோல் உடனடி தரிசனத்திற்குப் பதிவு செய்வதற்கான வசதி நிலக்கல்லில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஓணம் பண்டிகை சிறப்புப் பூஜைக்குப் பிறகு 10ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. பின்னர், புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 16ஆம் தேதி மீண்டும் திறக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.