செய்திகள்

சதுரகிரி கோயிலுக்குச் செல்ல இன்று முதல் 13 நாள்களுக்கு அனுமதி

தினமணி

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல இன்று முதல் 13 நாள்களுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். 

புரட்டாசி பிரதோஷம் மற்றும் மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் 26ஆம் தேதி வரை நான்கு நாள்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் 26-ம் தேதி நவராத்திரி விழா தொடங்குவதால் அதற்கும் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து அடுத்த மாதம் 5-ம் தேதி வரை பக்தர்கள் சதுரகிரி செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. 

இன்று முதல் 13 நாள்களுக்கு நாள்தோறும் பக்தர்கள் மலைக்கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். இரவில் கோயிலில் தங்க அனுமதி கிடையாது.

காய்ச்சல் சளி, இருமல் உள்ளவர்கள் கோயிலுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும். மலைப்பாதையில் உள்ள நீரோடைகளில் குளிப்பதற்குப் பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 8-இல் சேலத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

SCROLL FOR NEXT