செய்திகள்

மங்கள சனீஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா: ஏற்பாடுகள் தீவிரம்

மங்கள சனீஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரம் நடைபெற்று வருகின்றது. 

தினமணி

மங்கள சனீஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரம் நடைபெற்று வருகின்றது. 

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள விளாங்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது அட்சயபுரீஸ்வரர் ஆலயம். இந்த கோயில் பூச நட்சத்திர ஸ்தலம் என்பதால் பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நட்சத்திர பரிகாரம் செய்வதற்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து வருகை தருவது வழக்கம். மேலும் தமிழகத்திலேயே இந்த ஆலயத்தில் தனி சன்னதியில்  தெற்கு பார்த்தவாறு சனீஸ்வரரும் துணைவியாருடன் மங்களகர சனீஸ்வரராக காட்சியளிக்கிறார். 

ஒவ்வொரு முறையும் சனிப்பெயர்ச்சியின் போது இந்த கோயிலில் சிறப்பு யாகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து இந்த யாகத்தில் கலந்து கொள்வார்கள்.

அந்த வகையில் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயில் திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயில் மற்றும் விளாங்குளம் மங்கல சனீஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சனி பெயர்ச்சி விழா அதி விமர்சையாக நடைபெறும் நிலையில் வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி விளாங்குளம் மங்கள சனீஸ்வரர் கோயிலில் சனி பெயர்ச்சி விழா நடைபெறுவதால் அதற்கான முன்னேற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் கிராமத்தார்கள், யாகசாலை அமைப்பது பந்தல் அமைப்பது உள்ளிட்ட முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6.50 லட்சம் பிகார் வாக்காளர்களை தமிழ்நாட்டில் இணைப்பதா? ப.சிதம்பரம் கண்டனம்!

கால்வாயில் கார் கவிழ்ந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நிதியுதவி!

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் விரைவில் பாஜகவில் இணைவாா்கள்: மாணிக்கம் தாகூா் எம்.பி

மனைவி இருக்கும்போதே இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் வாழ்க்கை: கணவன் குத்திக் கொலை!

ஓவல் டெஸ்ட்: இங்கிலாந்து 164 ரன்கள் குவிப்பு; வெற்றி யாருக்கு?

SCROLL FOR NEXT