செய்திகள்

ஶ்ரீ மூலநாதர் சுவாமி கோயிலில் தேரோட்டம்: துணைநிலை ஆளுநர் பங்கேற்பு

புதுச்சேரி பாகூரில் எழுந்தருளி உள்ள ஶ்ரீ மூலநாதர் சுவாமி கோயிலில் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 

தினமணி

புதுச்சேரி பாகூரில் எழுந்தருளி உள்ள ஶ்ரீ மூலநாதர் சுவாமி கோயிலில் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 

புதுச்சேரி பாகூர் பகுதியில்1400 வருடங்கள் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு வேதாம்பிகை உடனுறை ஸ்ரீ மூலநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் பிரமோற்சவ விழா கடந்த 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினம்தோறும் மூலநாதருக்கு பல்வேறு வாகன சேவைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

அதனை தொடர்ந்து கடந்த 29ஆம் தேதி மூலநாதர் வேதாம்பிகை திருக்கல்யாண வைபவம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை 7 மணி அளவில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், எம்எல்ஏ செந்தில்குமார், இந்து அறநிலைத்துறை ஆணையர் சிவசங்கர் வட்டாட்சியர் பிரித்திவிராஜ் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்துகொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். 

அலங்கரிக்கப்பட்ட மூலநாதர் திருத்தேரில் வைக்கப்பட்டு திருத்தேரானது முக்கிய வீதிகளின் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இத்திருத் தேரோட்ட நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் ஓம் நமச்சிவாயா என்ற பக்தி கோசத்துடன் வடம் பிடித்து திருத்தேரை இழுத்து மூலநாதரை வணங்கிச் சென்றனர். அதனைத் தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT