செய்திகள்

வீட்டுக்கு வரும் பத்திரிகைகளை என்ன செய்யலாம்?

வீட்டில் சுப செய்தி படிப்பதால் வீட்டில் உள்ள எதிர்முறைச் சக்தி வெளியேறும்.

DIN

வீட்டுக்கு வரும் சுப மங்களச் செய்தி அழைப்பிதழ்/ பத்திரிகையாகும். மஞ்சள் தடவிய சுப மங்கள பத்திரிகையை தமிழில் வாசித்து பழகவும். கையில் வாங்கியவுடன் வீட்டில் உள்ளவர்களின் காதுகளுக்குத் தெளிவான கேட்கும்படி சப்தமாக வாசித்து காட்டவும். இதனால் பத்திரிகை கொடுத்த குடும்பமும், வாசித்த நாமும் நலம் பெறுவோம். வீட்டில் சுப செய்தி படிப்பதால் வீட்டில் உள்ள எதிர்முறைச் சக்தி வெளியேறும்.

* சுப மங்கள பத்திரிகைகளை வைத்து, குப்பைகளை அள்ளக் கூடாது. அவற்றை குப்பையில் போடக் கூடாது. பத்திரிகைகளை சேகரித்து வைப்பதால் நலமாக இருக்கலாம்.

* வீட்டுக்குப் போய் தான் பத்திரிகையை கொடுக்க வேண்டும். வீட்டில்தான் பத்திரிகை வாங்க வேண்டும். வெளியிடங்களில் பத்திரிகை தருவதையோ, வாங்குவதையோ முடிந்தவரையில் தவிர்க்க வேண்டும்.

* கோயில் கும்பாபிஷேகம் பத்திரிகை என்பது காரணம் இல்லாமல் அந்த பத்திரிகை நம் வீட்டுக்கு வராது. இந்த அழைப்பிதழ் வந்தால் நாம் அங்கு சென்று நிற்க வேண்டும் என்றே பொருள்.

* கிரகப்பிரவேச பத்திரிகை, கல்யாண பத்திரிகை, வளைகாப்பு பத்திரிகை, காதணி விழா, பெயர் சூட்டு விழா பத்திரிகை, தொழில் நிறுவனம் திறப்பு என ஒவ்வொன்றுக்கும் அழைப்பிதழ் வந்து அங்கு மொய் எழுத பணம் இல்லையே என வருந்த வேண்டாம். பங்கேற்றுவிட்டு வாருங்கள், விநாயகர் பார்த்து கொள்வார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

SCROLL FOR NEXT