செய்திகள்

கோவை ஐயப்பன் கோயிலில் ஆராட்டு நிகழ்ச்சி கொடியேற்றம்

இரண்டாம் சபரிமலை என்று அழைக்கப்படும் ஐயப்ப சாமி கோயிலில் வருகின்ற 12-ம் தேதி ஆராட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

DIN

கோவை ஐயப்பன் கோவிலில் ஆராட்டு முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.

கோவை சித்தாபுதூரில் அமைந்துள்ள இரண்டாம் சபரிமலை என்று அழைக்கப்படும் ஐயப்ப சாமி கோயிலில் வருகின்ற 12-ம் தேதி ஆராட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நிகழ்ச்சியின் தொடக்க விழாவாக நேற்று மாலை கொடியேற்றம் நிகழ்ச்சி ஆலயத்தின் தந்தை பிரம்மஸ்ரீ பாலக்காட்டில்லத்து சிவப்பிரசாத் நம்பூதிரி தலைமையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கொடியேற்றும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் எட்டு காலம் பூஜைகள் நடைபெற உள்ளது. மேலும் 12-ம் தேதி அன்று சுவாமி ஐயப்பன் திருவுருவ உற்சவ சிலையை மூன்று யானைகளுடன் மேல் அமர்த்தி செண்டை மேளம் முழங்கப் பஞ்சவாத்தியம் உடன் சித்தாபுதூர்,சத்தி ரோடு, கிராஸ் கட் ரோடு, 100 அடி ரோடு வழியாக ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறும்.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு இறுதி நாள் என்று பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மேலும் 2000 க்கு மேற்பட்டோருக்கு கோவில் நிர்வாகம் சார்பாக அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எங்கள் தோல்விக்குக் காரணம் ஹார்திக் பாண்டியா..! தெ.ஆ. பயிற்சியாளர் புகழாரம்!

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT