செய்திகள்

விழுப்புரம்: 90 அடி உயர ஆஞ்சனேயருக்கு 5000 லி பாலாபிஷேகம்!

ஸ்ரீ ஜெய ஜெய விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு நடைபெற்ற பிரம்மாண்ட பாலாபிஷேகம்.

DIN

விழுப்புரம்: விழுப்புரம் நகரில் ஆஞ்சனேயர் கோயில் கரையில் 90 அடி உயரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெய ஜெய விஸ்வரூப ஆஞ்சனேயர் சுவாமிக்கு 5000 லிட்டர் பாலைக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை பாலாபிஷேகம் நடைபெற்றது.

ஆண்டுதோறும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று ஆஞ்சனேய சுவாமிக்கு பாலாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி 18-ஆவது ஆண்டாக ஶ்ரீ ஜெய ஜெய விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் பாலாபிஷேகம் தொடங்கியது.

இதைத் தொடர்ந்து 5000 லிட்டர் பாலைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதற்காக தொட்டிகளில் பால் கொட்டி வைக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து, குழாய் மூலம் பால் மேலே ஏற்றப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இது டிரைலர்தான்... அக். 25-ல் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! புயலாக வலுவடையும்!

தமிழகத்தில் பகல் 1 மணிவரை கனமழை தொடரும்!

சென்னையில் அடுத்த 3 நாள்களுக்கு பலத்த மழை!

காஷ்மீரின் குரல்! ஃபரூக் அப்துல்லாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

தங்கம் விலை அதிரடி உயர்வு! இன்றைய நிலவரம்...

SCROLL FOR NEXT