செய்திகள்

சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்டம்!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம் இன்று (ஏப். 16) நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

DIN

திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம் இன்று (ஏப். 16) நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் நிகழாண்டு சித்திரைப் பெருந்திருவிழா கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இவ்விழாவில் 10ஆம் நாளான இன்று காலை கருவறையில் மாரியம்மனுக்கு பூஜைகள் செய்யப்பட்ட பின்னா், உற்ஸவ அம்பாளுக்கும் பூஜைகள் நடத்தப்பட்டு, திருத்தேர் வடம்பிடித்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சமயபுரத்தில் குவிந்துள்ளனா். சித்திரைத் தோ்த் திருவிழாவையொட்டி விரதமிருந்து வந்த பக்தா்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் பால்குடம், அக்னிசட்டி ஏந்தியும், அலகு குத்திக் கொண்டும் வருகின்றனர்.

பக்தா்கள் கொண்டு வரும் பாலை ஊற்றுவதற்கும், அக்னிசட்டி வழிபாடு நடத்துவதற்கும் திருக்கோயில் நிா்வாகம் சாா்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

SCROLL FOR NEXT