ராணிப்பேட்டை: மஹாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று(ஏப். 21) ராணிப்பேட்டை பஜார் தெருவில் உள்ள சுமதிநாத் ஜெயின் ஆலயத்தில் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு அரிசியை கொண்டு வழிபாடு நடத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து, மஹாவீரர் சிலை மற்றும் திருஉருவப் படம் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் திரளான ஜெயின் சமூகத்தினர் பாடல்களை பாடிய படி மேளதாளங்கள் முழங்க ராணிப்பேட்டை நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர்.
இந்த ஊர்வலத்தில் உயிர்களை கொல்லக் கூடாது, மது அருந்த கூடாது என மஹாவீரரின் கொள்கைகளையும் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.