82 ஆண்டுகளுக்குப் பிறகு, நீடாமங்கலம் அருகே தேவங்குடி கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ கோதண்ட ராமஸ்சுவாமி திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகேயுள்ள தேவங்குடி கிராமம். இங்கு மிகவும் பழமைவாய்ந்த கோதண்ட ராமஸ்சுவாமி கோயில் உள்ளது.
இக்கோயிலில் 1942 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பிறகு கோயில் சிதிலமடைந்து பராமரிப்பு இன்றி இருந்தது. ஊர்மக்கள் அனைவரும் ஒன்றுகூடி சிதிலமடைந்த கோயிலை புதிப்பித்து 82 ஆண்டுகளுக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிஷேகம் அதிவிமர்சையாக நடைபெற்றது .
கடந்த ஏப். 26-ம்தேதி வெள்ளிக்கிழமை விக்னேஸ்வர பூஜை , லட்சுமி ஹோமம் , நவக்கிரக பூஜை உடன் யாகசாலை பூஜைகள் துவங்கி மூன்று நாள்கள் யாக பூஜைகள் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து, கோயிலின் விமான கலசத்தில் தீட்சிதர்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோபுர கலசத்திற்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது
பின்னர் மூலஸ்தான சன்னதியில் ஸ்ரீ சீதாதேவி , லெட்சுமனர் சமேதரராக காட்சியளித்த ஸ்ரீ கோதண்ட ராமஸ்சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து, மகா தீபாரதனை காட்டப்பட்டது . இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.