தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (டிசம்பர் 6 - 12) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
மாற்றி யோசித்து சிந்தனைகளைச் செயல்படுத்துவீர்கள். செயல்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய வீடு, வாகனங்களை வாங்குவீர்கள். கடன்களை அடைப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்களின் பணிகள் தொய்வில்லாமல் நடக்கும். வியாபாரிகளிடையே போட்டியும் பொறாமையும் குறையும். விவசாயிகளுக்கு மகசூல் லாபம் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகளிடம் மேலிடம் பாராமுகமாக இருக்கும். கலைத் துறையினருக்கு வருவாய் அதிகரிக்கும். பெண்கள் நிம்மதியைக் காண்பீர்கள். மாணவர்கள் கல்வியில் வெற்றியை அடைவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
உடல் ஆரோக்கியம் மேம்படும். மருத்துவச் செலவுகள் குறையும். யாருக்கும் கடன் அளிக்க வேண்டாம். திட்டமிட்ட வேலைகளை முடிப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு உண்டு. வியாபாரிகள் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக இருப்பீர்கள். விவசாயிகள் புதிய பொருள்களை விற்பீர்கள்.
அரசியல்வாதிகள் வெற்றியைக் காண்பீர்கள். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் புதிய ஆடைகள், அணிகலன்களை வாங்குவீர்கள். மாணவர்களின் அணுகுமுறையில் தெளிவான மாற்றங்கள் கிடைக்கும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
வருமானத்துக்கு குறைவு இருக்காது. மறைமுக எதிர்ப்புகள் விலகிவிடும். உங்களது ஆலோசனைகளை நண்பர்கள் கேட்பார்கள். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் உற்சாகமாகப் பணிபுரிவீர்கள். வியாபாரிகள் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். அரசியல்வாதிகள் தொண்டர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள்.
கலைத் துறையினர் சிறிய விஷயங்களில் அக்கறையோடு இருப்பீர்கள். பெண்கள் உறவினர்களோடு சகஜமாக பழகுவீர்கள். மாணவர்கள் பாடங்களை உடனுக்குடன் படித்து முடித்து விடுவீர்கள்.
சந்திராஷ்டமம் - டிசம்பர் 6.
கடன் வசூலாகும். சமூகத் தொண்டுகளால் புகழ் கிடைக்கும். குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்பார்கள். எவரிடமும் வாக்குவாதம் வேண்டாம்.
உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுக்கான அறிகுறி கிடைக்கும். வியாபாரிகள் கொடுக்கல்} வாங்கலில் சீரான நிலையைக் காண்பீர்கள். விவசாயிகள் கால்நடை பராமரிப்புக்குச் செலவு செய்ய நேரிடும்.
அரசியல்வாதிகளின் பொறுப்புகள் கட்சியில் அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு வருமானம் கூடும். பெண்கள் சுபநிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். மாணவர்கள் நல்ல நண்பர்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - டிசம்பர் 7, 8.
பொருளாதாரம் வளர்ச்சி அடையும். காணாமல் போன பொருள்கள் திரும்பக் கிடைக்கும். பெரியோர்களின்ஆசியைப் பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளை முடித்துவிடுவீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளை ஆலோசித்து முடிவை எடுப்பீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகள் உடனிருப்போரை அனுசரித்து நடப்பீர்கள். கலைத் துறையினர் பிறர் விஷயத்தில் தலையிட வேண்டாம். பெண்களுக்கு வருவாய் கிடைக்கும். மாணவர்கள் உடற்பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் - டிசம்பர் 9, 10.
குழந்தைகளால் பெருமையடைவீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள். சொத்துகள் வாங்க முன்பணம் அளிப்பீர்கள். உடனிருப்போருக்கு உதவுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். வியாபாரிகள் நஷ்டத்தைக் குறைக்க முயற்சிப்பீர்கள். விவசாயிகள் வரப்புப் பிரச்னைகளில் முடிவைக் காண்பீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சிரீதியான பயணங்களைக் காண்பீர்கள். கலைத் துறையினர் புதிய நுட்பங்களைக் கற்பீர்கள். பெண்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு
விளையாட்டுகளில் ஈடுபடுவீர்கள்.
சந்திராஷ்டமம் - டிசம்பர் 11, 12.
எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். நன்மை உண்டாகும். நாடி வருவோருக்கு உதவுவீர்கள். அணுகுமுறைகளை மாற்றி, வெற்றி பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலக ரீதியான பயணங்களை மேற்கொள்வீர்கள். வியாபாரிகள் சிறு அலைச்சல்களைச் சந்திப்பீர்கள்.
விவசாயிகள் பாசன வசதிகளை மேம்படுத்துவீர்கள்.
அரசியல்வாதிகள் நற்காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். கலைத் துறையினரின் முயற்சிகள் வெற்றி அடையும். பெண்கள் குடும்ப ஒற்றுமையைக் காண்பீர்கள். மாணவர்கள் வெளியூர் சென்று படிப்பீர்கள்.
சந்திராஷ்டமம் -இல்லை.
சாதுர்யமாகப் பேசி காரியங்களைச் சாதிப்பீர்கள். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்வீர்கள். குழந்தைப் பேறு உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி நிறையும்.
உத்தியோகஸ்தர்களை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். வியாபாரிகள் கடையை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
அரசியல்வாதிகளின் கட்சிப் பயணம் சிறக்கும். கலைத் துறையினரின் தேவைகள் நிறைவேறும். பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள். மாணவர்கள் வெளிவிளையாட்டுகளில் திறமையுடன் இருப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். குடும்பத்தில் குதூகலம் நிறையும். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டு. தனித்திறமையும் தன்னம்பிக்கையும் கூடும்.
உத்தியோகஸ்தர்கள் புதிய இடங்களில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகள் போட்டிகளை எதிர்கொள்வீர்கள். விவசாயிகளுக்கு அரசு சலுகைகள் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் புகழைத் தக்க வைப்பீர்கள். கலைத் துறையினர் முயற்சிக்கேற்ற வருவாய் கிடைக்கும். பெண்களின் பொருளாதாரம் சிறக்கும். மாணவர்கள் ஆசிரியர்களின் அன்புக்குப் பாத்திரமாவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
நல்லவர்களின் நட்பு கிடைக்கும். நேர்முகச் சிந்தனைகளை வளர்ப்பீர்கள். சொத்துகளில் வருமானம் கிடைக்கும். குடும்பப் பிரச்னைகளைச் சாதுர்யமாக எதிர்கொள்வீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் நேரம் பாராமல் உழைப்பீர்கள். வியாபாரிகளுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். விவசாயிகளுக்கு சாதகமான சூழல் உண்டாகும்.
அரசியல்வாதிகளோ பாராட்டுகளால் நனைவீர்கள். கலைத் துறையினரின் முயற்சிகளில் வெற்றி உண்டு. பெண்கள் குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். மாணவர்களின் கோரிக்கைள் நிறைவேறும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
வருமானம் சிறப்பாக இருக்கும். கடன்களை அடைப்பீர்கள். தொழிலில் புதிய நுணுக்கங்களைப் புகுத்துவீர்கள். வழக்குகளில் சாதகமான சூழல் நிலவும்.
உத்தியோகஸ்தர்கள் ரகசியங்களைக் காக்கவும். வியாபாரிகளுக்கு நண்பர்களுடனான பகைமை நீங்கும். விவசாயிகளின் பொருள்களுக்கு சந்தையில் மதிப்பு கூடும்.
அரசியல்வாதிகளின் மதிப்பு உயரும். கலைத் துறையினர் இளைய கலைஞர்களை ஊக்குவிப்பீர்கள். பெண்கள் குடும்பத்தினரிடம் நல்லுறவைப் பேணுவீர்கள். மாணவர்கள் நினைத்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் -இல்லை.
பொருளாதாரம் மேன்மையாக இருக்கும். அரசு சலுகைகள் கிடைக்கும். பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கட்டளைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரிகள் விற்பனையைப் பெருக்குவீர்கள். விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்குவீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சியில் எவரிடமும் வெளிப்படையாகப் பழகாதீர்கள். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
பெண்கள் குடும்பத்துடன் கேளிக்கைகளில் பங்கேற்பீர்கள். மாணவர்கள் சக மாணவர்களிடம் அனுசரித்து நடப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.