செய்திகள்

காளஹஸ்தி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் கொடியேற்றம்!

காளஹஸ்தி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

DIN

பஞ்சபூத சிவத் தலங்களில் வாயு தலமான காளஹஸ்தி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தியில் உள்ள ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெறும் அதன்படி இந்தாண்டு பிரம்மோற்சவம் நேற்று தொடங்கியது.

தொடர்ந்து 16-ம் தேதி வரை 13 நாள்களுக்கு விமரிசையாக நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு நேற்று மாலை கண்ணப்பர் மலையில் உள்ள கோயிலில் வேத மந்திரங்கள் முழங்கக் கொடியேற்றம் நடைபெற்றது.

பஞ்ச மூர்த்திகள் நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்தனர். திருவீதியுலாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

அந்நிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

மகளிர் உலகக் கோப்பைக்கான ஐசிசி அணியில் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா, தீப்திக்கு இடம்!

SCROLL FOR NEXT