வெள்ளியங்கிரி
வெள்ளியங்கிரி 
செய்திகள்

வெள்ளியங்கிரி செல்வோருக்கு புதிய கட்டுப்பாடு!

DIN

தென்கைலாயம் என்றழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோயிலுக்கு மலையேறிச் செல்லும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். ஏழு மலைகளைத் தாண்டி சுயம்பு வடிவில் இருக்கக்கூடிய சிவலிங்கத்தைத் தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

மலையேறி தரிசனம் செய்ய பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்களுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்தாண்டு ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட மூவர் அடுத்தடுத்து பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில், மலையேறி தரிசனம் செய்ய சென்ற ஐந்து பேர் கடந்த ஒரு மாதத்தில் பலியாகியுள்ளனர். ஒரே நாளில் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் சிவ பக்தர்களுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், மூச்சுத் திணறல், இருதய நோய், உடல் பருமன், வயது முதிர்ந்தவர்கள் வெள்ளியங்கிரி மலையேற வேண்டாம் என்று கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT