கோப்புப்படம் 
செய்திகள்

சபரிமலை கோயில் நடை திறப்பு!

வைகாசி மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது.

DIN

வைகாசி மாதத்தின் மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது.

நாளை காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகளுடன் சிறப்புப் பூஜை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற 19-ஆம் தேதி இரவு 10 மணிவரை பக்தர்களின் தரிசனத்துக்கு கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். நாள்தோறும் காலை நெய் அபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெறும்.

மே 19-ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு ஹரிவராசனம் பாடி சபரிமலை கோயில் நடை அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைகாசி மாத பூஜையுடன், வருகின்ற 19-ஆம் தேதி கோயில் பிரதிஷ்டை தினமும் சேர்ந்து வருவதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பக்தர்கள் தரிசனத்துக்கு www.sabarimala.org என்ற இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்யலாம் என்று கோயில் நிர்வாகம் கேட்டுகொண்டுள்ளது.

சபரிமலை நடை திறப்பை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இருந்து பம்பைக்கு சிறப்புப் பேருந்துகளை கேரள அரசு போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக தோ்தல் அறிக்கை கதாநாயகியாகவும் இருக்கும்: கனிமொழி எம்.பி.

தேமுதிக இண்டி கூட்டணிக்கு வரவேண்டும்: ஜோதிமணி எம்.பி.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்பு: டி.டி.வி. தினகரன்

ரயில்வே ஊழியா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டி? நயினார் நாகேந்திரன் பதில்!

SCROLL FOR NEXT