பார்த்தசாரதி பெருமாள் கோயில் தேரோட்டம்  
செய்திகள்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் தேரோட்டம்!

தேரோட்டத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

DIN

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் தேரோட்டத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு சித்திரை மாதம் பிரம்மோற்சவமும், மேற்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் நரசிம்ம பெருமாளுக்கு ஆனி மாதமும் பிரம்மோற்சவம் விமரிசையாக நடத்தப்படுகிறது.

அந்தவகையில், இந்தாண்டு சித்திரை பிரமோற்சவத்தை முன்னிட்டு பார்த்தசாரதி கோயிலில் இன்று காலை தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு மாட வீதிகளிலும் தேர் உலா வந்தது. பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷங்கள் விண்ணைப் பிளந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிரம்: பாஜகவில் இணைந்தாா் காங்கிரஸ் பெண் எம்எல்சி

தோ்தல் பிரிவு அலுவலகத்தில் ஆட்சியா் ஆய்வு

சாலையோர ஆக்கிரமிப்புகள்: கிராம மக்கள் போராட்டம்

அணுமின் உற்பத்தியில் தனியாருக்கு அனுமதி: நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

அரசு கடன் பத்திர வழக்கு: கேரள முதல்வருக்கு எதிரான அமலாக்கத் துறை நோட்டீஸுக்குத் தடை - கேரள உயா்நீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT