பெங்களூர் பக்தர் ஒருவர் ஸ்ரீ வெங்கடேஸ்வர அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நன்கொடை அளித்தார். மற்றொரு பக்தர் வைரங்கள் மற்றும் வைஜயந்தி கற்கள் பதிக்கப்பட்ட தங்க லட்சுமி பதக்கத்தை ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்கியதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கல்யாண் ராமன் கிருஷ்ணமூர்த்தி என்ற பக்தர் அளித்த நன்கொடையானது, ஏழுமலையான் மலைக் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அறக்கட்டளையின் சார்பாக இலவச உணவு வழங்கப்படுகிறது.
பக்தர் அளித்த வரவோலையைத் திருமலையில் உள்ள கூடுதல் தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சௌத்ரியிடம் ஒப்படைத்ததாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பெங்களூரைச் சேர்ந்த மூர்த்தி, ரூ. 25 லட்சம் மதிப்புள்ள 148 கிராம் எடையுள்ள வைரம் மற்றும் வைஜயந்தி பதித்த தங்க லட்சுமி பதக்கத்தை நன்கொடையாக வழங்கினார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவாரி கோயிலுக்குள் உள்ள ரங்கநாயக்குலா மண்டபத்தில் வெங்கையா சௌத்ரியிடம் அவர் அந்த ஆபரணத்தை ஒப்படைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.