தஞ்சை மாவட்டம், சுவாமிமலை சுவாமிநாத கோயிலில் தங்கக் கவசம், வைரவேலுடன் அருள்பாலித்த முருகன் - கோப்புப்படம் 
செய்திகள்

ஆடிக் கிருத்திகை: சுவாமிமலை முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு!

ஆடிக் கிருத்திகையொட்டி சுவாமிமலை முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இணையதளச் செய்திப் பிரிவு

கும்பகோணம்: ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் முருகக்கடவுளின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது.

இங்கு 60 தமிழ் வருட தேவதைகளும் - 60 படி கட்டுகளாக இருந்து இங்கு வரும் முருக பக்தர்களுக்கு சேவை செய்வதாக ஐதீகம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தில் ஆடிக் கிருத்திகை விழாவையொட்டி இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டது.

மூலவருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தங்க கவசம் மற்றும் வைரவேலுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

உற்சவர் ஆறுமுக கடவுளுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாரதனைகள் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து வந்து முருக கடவுளை தரிசனம் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுவையிலும் தரத்திலும் மனதை நிரப்பியதா? இட்லி கடை - திரை விமர்சனம்

இதயப்பூர்வம்... மடோனா செபாஸ்டியன்!

விஜய் மீது செருப்பு வீசப்பட்டது ஏன்? - செந்தில் பாலாஜி விளக்கம்!

மதுபாட்டிலுக்கு ரூ. 10 வசூல்: செந்தில் பாலாஜி விளக்கம்!

தேரே இஷ்க் மெய்ன் டீசர்!

SCROLL FOR NEXT