சபரிமலை கோயில் (கோப்புப்படம்) 
செய்திகள்

சபரிமலை கோயிலில் நாளை நடை திறப்பு: 18 நாள்கள் திறந்திருக்கும்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை நடை திறப்பு தொடர்பாக...

DIN

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி ஆராட்டு விழாவுக்காக நாளை(ஏப். 1) நடை திறப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர விழா, ஆராட்டு விழா, சித்திரை விஷு பண்டிகையையொட்டி கோயில் நடை தொடர்ந்து 18 நாள்கள் திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படும் நிலையில், ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி விஷு கனி தரிசனம், படி பூஜைகள் நடைபெற்று, ஏப்ரல் 18 ஆம் தேதி இரவு ஹரிவராசனம் முடிந்தவுடன் நடை அடைக்கப்படும்.

பின்னர், வைகாசி மாத பூஜைக்காக மே 14 ஆம் தேதி திறக்கப்பட்டு, மே 19 ஆம் தேதி நடை அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் இணையதளத்தில் முன்பதிவு செய்வது அவசியம் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

முன்னதாக, மாசி மாத பூஜைக்காக பிப். 12 அன்று திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, பிப். 17 அன்று அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஜிப்லி ட்ரெண்டில் இணைந்த எடப்பாடி பழனிசாமி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இசைக் கச்சேரி நிகழ்ச்சிகள்: நுழைவுச் சீட்டு முன்பதிவு தொடக்கம்

அரசு மருத்துவமனையில் லஞ்சம் பெற்ற 13 ஊழியா்கள் மீது நடவடிக்கை - அமைச்சா் மா.சுப்பிரமணியன்

நக்ஸல்கள் வன்முறையைக் கைவிட்டு வளா்ச்சிப் பாதையில் இணைய வேண்டும்: குடியரசுத் தலைவா்

கோவில்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

பாமக சாா்பில் பொதுக்குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT