திருப்பதி கோயில் 
செய்திகள்

திருப்பதி செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் கவனத்துக்கு!

வார இறுதியில் திருப்பதி திருமலை சென்று சுவாமி தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளவர்கள் கவனத்துக்கு!

DIN

மே மாதம் தொடங்கிவிட்டது. கோடை விடுமுறையும் தொடங்கியிருப்பதால், ஏராளமானோர் திருப்பதி திருமலைக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்ய திட்டமிடுவார்கள்.

இதன் காரணமாக, திருமலை திருப்பதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்திருப்பதாகவும், சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் 24 மணி நேரம் காத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருமலை திருப்பதியில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருப்பதைத் தவிர்க்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் 21 அறைகளும் நிரம்பி வழிவதாகவும், கோயில் வளாகத்தில் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

சிறப்பு தரிசனம் தவிர்த்து, இலவச தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் குறைந்தது 24 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாயன்று, உள்ளூர் மக்களுக்கு சுவாமி தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் பணியானது நாளை காலை 5 மணிக்குத் தொடங்க விருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹதி கலையரங்களம், பாலாஜி நகர் கம்யூனிட்டி ஹால் ஆகியவற்றில் இந்த டோக்கன்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஐபி தரிசனத்தில் மாற்றம்

கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் விஐபி தரிசனத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மே 1 முதல் ஜூலை 15 வரை இது சோதனை முறையாக மேற்கொள்ளப்படவிருக்கிறது.

அதாவது, விஐபிக்கள் நேரடியாக கோயிலுக்கு வரும்போது மட்டுமே அவர்களுக்கு விஐபி தரிசனம் வழங்கப்படும். விஐபி தரிசன நேரம் காலை 6 மணியாக மாற்றப்படும். இது சரியாக செல்லும்பட்சத்தில் இதனை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது விஐபிக்களின் பரிந்துரைக் கடிதத்துடன் வருபவர்களுக்கு காலை 8 மணிக்கும், விஐபிகளுக்கு 10 மணிக்கும் அதனைத் தொடர்ந்து ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு சுவாமி தரிசனம் வழங்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்வரத்து: இன்றைய நிலவரம்!

தங்கம் விலை ரூ. 87 ஆயிரத்தைக் கடந்தது! 3 நாள்களில் ரூ. 2,000 உயர்வு!

முதியவா்களுக்கு எதிரான குற்றங்கள்: தமிழகம் 4-ஆவது இடம்!

பாடகர் ஸுபீன் கர்கின் மேலாளர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது!

வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு!

SCROLL FOR NEXT