திருத்தேர் 
செய்திகள்

மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவில் திருத்தேர் வைபவம்!

மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவில் திருத்தேர் வைபவம் இன்று சிறப்பாக நடைபெற்றது.

இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை: மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் புரட்டாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு கோலாகலமாக நடைபெற்றது திருத்தேர் வைபவம். பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி வழிபாடு செய்தனர்.

மதுரை தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவிலில் புரட்டாசிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருத்தேர் வைபவம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று "கோவிந்தா" என்ற கோஷம் முழக்கிட சுவாமி தரிசனம் செய்தனர்.

மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலின் இணைப்பு கோவிலான மதுரை தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோவிலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற விழாக்களில் ஒன்றான புரட்டாசி மாத பிரமோற்சவ பெருந்திருவிழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 05ம் தேதி வரை நடைபெறுகிறது.

பிரமோற்சவ விழாவை முன்னிட்டு தினமும் காலையில் பெருமாள் தாயார்களுடன் பல்வேறு அலங்காரத்திலும், மாலையில் பல்வேறு வாகனங்களிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரமோற்சவ பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருத்தேர் வைபவம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

முன்னதாக அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் பெருமாள் எழுந்தருள நடைபெற்ற சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து திருத்தேர் வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

திருத்தேர் வலம் வந்த பகுதிகளில் எல்லாம் பக்தர்கள் கோவிந்தா எனும் கோஷம் முழங்கிட சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் விழாக்களில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தெப்ப உற்சவம் வரும் 04 -ம் தேதி காலை, மாலை என இரு வேளைகளில் நடைபெற உள்ள நிலையில், வரும் O5-ம் ஆம் தேதி உற்சவ சாந்தியுடன் விழா நிறைவு பெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அவ தான் என்னவ... 🌹🌹😘 கௌரி கிஷன்

இந்தியா வருகிறார் தலிபான் அரசின் வெளியுறவு அமைச்சர்!

கொஞ்சும் எழிலிசையே.. அனு!

பாஜகவின் தூண்டுதலில் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார் - திருமா | Vck | TVK | Karur

திமுகவிற்கும் விஜய்க்கும் Underground dealing ஆ? - திருமா | TVK | VCK | Karur

SCROLL FOR NEXT