காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் 
செய்திகள்

புரட்டாசி சனிக்கிழமை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

புரட்டாசி 4வது சனிக்கிழமை என்பதால் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்.

இணையதளச் செய்திப் பிரிவு

காஞ்சிபுரம்: புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமை என்பதால், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்துள்ளனர். 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான, உலகப் பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி மாதம் 4 வது (கடைசி) சனிக்கிழமையை ஒட்டி வரதராஜ பெருமாளை திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமை என்பதால் அத்திகிரி மலையில் உள்ள மூலவர், உற்சவர், வரதராஜ பெருமாளுக்கு மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்து தூப தீப ஆராதனைகள் செய்து நெய் தீப விளக்கு வெளிச்சத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

சுவாமி தரிசனம் செய்வதற்கு காலை வேளையிலேயே, உள்ளூர் மற்றும் வெளியூர், வெளிமாநிலம் என பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்தில் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.

சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து வரதராஜ பெருமாளையும் பெருந்தேவி தாயாரையும் சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டனர்.

கோவில் வளாகத்தில் உள்ள சக்கரத்தாழ்வார் சன்னதி, அத்தி வரதர் துயில் கொள்ளும் அனந்த சரஸ் திருக்குளத்தையும் பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு மகிழ்ச்சியுடன் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2-வது டெஸ்ட்: ஜடேஜா அசத்தல்; மே.இ.தீவுகள் நிதான ஆட்டம்!

துவாரகாதீஷ் கோயிலில் குடியரசுத் தலைவர் முர்மு தரிசனம்

இன்பமே... ரகுல் ப்ரீத் சிங்!

இத்தனை கணவர்களா? கவனம் ஈர்க்கும் நிகிலா விமலின் பெண்ணு கேஸ் டீசர்!

‘கூட்ட அறிவியல்’ கொஞ்சமாவது கற்கனும்!

SCROLL FOR NEXT