முகப்பு
செய்திகள்

செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோயிலில் தீர்த்தக்குட ஊர்வலம்!

மாரியம்மன் கோயிலில் தீர்த்தக்குட ஊர்வலம் பற்றி..

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 1:23 PM
தீர்த்தக்குட ஊர்வலம்
பகிர்:
Updated On : 19 பிப்ரவரி, 2026 at 1:20 PM

செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்ற தீர்த்தக்குட ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

சேலத்தில் பிரசித்தி பெற்ற செவ்வாய்பேட்டை மாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 22ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இதனையொட்டி கும்பாபிஷேக விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று முதல் இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றுத் தொடர்ந்து கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 1:22 PM

விழாவின் முதல் நாளான இன்று தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது. சேலம் செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதர் திருக்கோயிலிருந்து துவங்கிய இந்த தீர்த்தக்குட ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் பல்வேறு புண்ணிய நதியிலிருந்து எடுத்துவரப்பட்ட தண்ணீரைத் தீர்த்தக் குடமாக எடுத்து வந்தனர்.

Advertisement

தாரை, தப்பட்டை, மேளதாளங்கள் முழங்கக் குதிரை பசு மாடுகள் அணிவகுத்துச் செல்ல ஊர்வலம் நடைபெற்றது. செவ்வாய்பேட்டையில் பல்வேறு வீதிகள் வழியாகச் சென்ற ஊர்வலம் இறுதியில் கோயிலை அடைந்தது தொடர்ந்து அம்மனுக்கு எடுத்துவரப்பட்ட தீர்த்த கலசங்கள் யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட உள்ளது. ஊர்வலத்தையொட்டி சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் போலீஸார் பலத்த பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர். கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாட்டினை விழாக் குழுவினர் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.

summary

Thousands of women participated in the Theerthakuda procession on the occasion of the Kumbabhishekam ceremony of the Mariamman Temple in Sevevaipet.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.