பொங்கல் வைக்க உகந்த நேரம் 
செய்திகள்

பொங்கல் வைக்க உகந்த நேரம்!

பொங்கல் வைக்க உகந்த நேரம் பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

வீடுகளில் பொங்கல் வைக்க உகந்த நேரம் எதுவென்று தினமணி இணையதள ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார். 

ஆடி மாதத்தில் தேடி விதைத்த விளைச்சல் அறுவடை செய்து பயனடையும் பருவமே தை மாதமாகும். அந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை சர்க்கரை, பால் நெய் சேர்த்துப் புதுப்பானையில் பொங்க வைத்து சூரியனுக்கு படைக்கும் திருநாளே பொங்கல் திருநாளாகும்.

சூரிய பகவான் தனுர் ராசியிலிருந்து மகர ராசியில் பிரவேசிப்பது மகரசங்கராந்தியாகும்.  உத்தராயணம் எனச் சொல்லக்கூடிய அயணம் ஆரம்பமாகும். இது ஆறு மாதங்கள் அதாவது தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய இருக்கும் அயணமாகும். மகாபாரத போர் சமயத்தில் பீஷ்மாச்சாரியார் எதிர்பார்த்துக் காத்திருந்த காலம் இந்த உத்தராயணம். இது மிகவும் அதிக பலன் அளிக்கக்கூடிய அயண மாதங்களாகும்.

தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகையும், உத்தராயண புண்யகாலம் எனப்படும் மாதப் பிறப்பு தர்ப்பணமும் எப்போதும் சேர்ந்து வரும். பொங்கல் பண்டிகையை எப்போது கொண்டாடுவது, மாத பிறப்பு தர்ப்பணத்தை எப்போது செய்வது என்று பல சமயங்களில் மக்களுக்கு சந்தேகம் ஏற்படுவது உண்டு.

பொங்கல் பண்டிகை என்பது எப்போதும் புதுப்பானை வைத்து பொங்கல் செய்வது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் எந்தெந்த லக்னங்களில் செய்வது உகந்தது என்றால், இதற்கு மகர மற்றும் கும்ப லக்னங்கள் உத்தமமாகும் மற்றவை மத்திமமாகும். தை முதல் நாள் அன்று மகர மற்றும் கும்ப லக்னங்கள் காலை 06.00 மணி முதல் 10.00 வரையிலும் இருக்கும், இந்த நான்கு மணி சமயத்தில் எது ஏற்றதோ அதாவது ராகு காலம் மற்றும் எமகண்ட வேளை ஏற்படாமல் இருக்கும் லக்னமாக பார்த்துகொள்ள வேண்டும்.

மகரம் என்றால் தை மாதத்தையும், கும்பம் என்றால் பானையைக் குறிக்கும் ஆகையால் நம் முன்னோர்கள் கடைப்பிடித்த நேரங்களை நாமும் கடைப்பிடித்தால் நன்மை கிட்டும்.

தற்போது வரும் தை 1-ம் தேதி (15.01.2026) திங்கள் கிழமை மாதப் பிறப்பு ஏற்படுகிறது.

பொங்கல் வைக்க உகந்த நேரம் 

15.01.2026 தை 01 (வியாழக் கிழமை) - காலை 7.30 - 9.00

காலை 10.30 - 11.00

கூடுமானவரை பொங்கல் வைக்கும்போது இராகு காலம் பிற்பகல் 1.30 - 3.00, எமகண்டம் காலை 6.00 - 7.30 இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.

மாட்டுப் பொங்கல் வைக்க உகந்த நேரம்

16.01.2026 தை 02 (வெள்ளிக் கிழமை) கோ / காளை பூஜைக்கு உகந்த நேரம் காலை 7.30 - 9.00

உத்தராயணம் புண்யகால (தை மாதப் பிறப்பு) தர்ப்பணம் எப்போது?

உத்தராயண புண்யகால தை மாதப் பிறப்பு பிதுர் தர்ப்பணத்தை காலை 08.00 மணிக்குள் செய்தால் முழு பலனையும் அடையலாம்.

துவாதசி பாரணை காலை 8.30

Perungulam Ramakrishnan, the astrologer for the Dinamani website, has predicted and provided the auspicious time for preparing Pongal in homes.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனம் துவங்கியது!

Vaa Vaathiyar - Movie Review! | எம்ஜிஆரா? நம்பியாரா? | Karthi | Nalan Kumarasamy | Dinamani Talkies

பங்குச் சந்தை 2வது நாளாக சரிவுடன் நிறைவு!

அவர்கள் செய்வது ரௌடித்தனம்... யாரைச் சொல்கிறார் சுதா கொங்கரா?

“பொழுதுபோக்கிற்குள் அரசியல் வேண்டாம்!” நடிகர் ரவி மோகன்

SCROLL FOR NEXT