ராம நவமி: சீரடி சாய்பாபா கோயில் இன்று முழுவதும் நடை திறப்பு!
சாய் பாபா அவதார தினமான இன்று சீரடியில் கோலாகலம்..
ஸ்ரீ ராம நவமியான இன்று சாய் பாபாவின் அவதாரத் திருநாளையொட்டி சீரடியில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.
ராம அவதாரத்துக்குப் பிறகு பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து ஆவணி தேய்பிறை அஷ்டமி திதியில் கிருஷ்ணர் பிறந்தார். அந்த அவதாரம் நிறைவு பெற்று பல ஆயிரம் ஆண்டுகள் கடந்த நிலையில், ஒரு பங்குனி மாதம் நவமி திதியன்று சாய் பாபா அவதாரம் நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது.
ராம நவமியான இன்று சாய் பாபாவின் அவதாரத் திருநாளாகவும் ஜெயந்தியாகவும் பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.
கோடிக்கணக்கான மக்கள் மனதில் கடவுள் அவதாரமாகக் கருதப்படும் சாய்பாபா அவதரித்த தினமான இன்று சீரடியில் அவரின் பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இன்று காலை முதல லட்சக்கணக்கான பக்தர்கள் பாபாவின் அருளைப் பெறக் குவிந்துள்ளனர்.
பக்திப் பரவசத்துடன் ஸ்ரீராம நவமி விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றது. விழாவைக் கொண்டாடும் வகையில், சீரடி முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சீரடிக்கு வருகை தருவதால், இன்று இரவு முழுவதும் சீரடி சாய் பாபா கோயில் திறந்திருக்கும் என சாய் பாபா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.