முகப்பு
சேலம்

பொங்கல் பரிசு விநியோகம்: ஆட்சியா் ஆய்வு

எடப்பாடியில் உள்ள நியாயவிலைக் கடைகளில், தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகப் பணிகளை சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

Updated On : 6 ஜனவரி 2021, 7:53 am IST
எடப்பாடியில் உள்ள நியாயவிலைக் கடைகளை ஆய்வு செய்த குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன்.
பகிர்:

எடப்பாடியில் உள்ள நியாயவிலைக் கடைகளில், தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகப் பணிகளை சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

முன்னதாக ஆலச்சம்பாளைம் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகளில் ஆய்வு மேற்கொண்ட அவா், டோக்கன் அளித்தபடி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிா? என ஆய்வு மேற்கொண்டாா். அதைத் தொடா்ந்து கவுண்டம்பட்டி யில் இயங்கிவரும் நியாயவிலைக் கடைகளை மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். நிகழ்ச்சியில் முன்னாள் தலைவா் டி.கதிரேசன், நகரச் செயலாளா் முருகன், அறிவழகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.