சட்டமணி

தேர்தல் ஸ்பெஷல் - 3 புதிய அரசியல் கட்சி தொடங்குவது எப்படி?

வழக்கறிஞர் சி.பி. சரவணன்

இந்தியாவில் மொத்தம் 1,900 க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட கட்சிகள் உள்ளன. இவற்றில் ஒரு சில கட்சிகளுக்கே தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. அவற்றில் தேசிய கட்சிகள் என 7 கட்சிகளுக்கும், மாநில கட்சிகள் என 59 கட்சிகளுக்கும் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஒத்த கருத்துடையவர்கள், அவர்களின் சங்கங்கள் / கழகங்கள் மற்றும் அமைப்புகள் ஒருகட்சியாக உருவெடுக்க வேண்டும் எனில் தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்தல் வேண்டும். கட்சியாக விரும்பும் ஒரு குழு, அமைப்பு, கழகம் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்- 1988 தொடங்கிய போது நிகழ் நிலையில் இருப்பின், தொடங்கியதில் இருந்து 60 நாட்களுக்குள்ளும், அந்தக் குழு, இந்த மக்கள் பிரதிதித்துவச் சட்டம் இதன் தொடக்கத்திற்கு பின்ஆரம்பிக்கப்பட்டிருந்தால் அமைக்கப்பட்ட தேதியின் பின்னிட்டு 30 நாட்களுக்குள்ளும் விண்ணப்பம் செய்யப்படுதல் வேண்டும். அந்த விண்ணப்பத்தில், விண்ணப்பித்த கழகத்தின் தலைமைச் செயல் அலுவலர், செயலாளர், கையொப்பமிட வேண்டும், அந்தக் கையெழுத்தானது தேர்தல் ஆணையத்தின் செயலருக்கு முன்நிகழ வேண்டும், அல்லது செயலருக்கு பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்படுதல் வேண்டும்.

விண்ணப்பத்தில் கட்சியின் பெயர், அது அமைந்துள்ள மாநிலம், அதற்கான கடிதங்கள் அனுப்பவேண்டிய முகவரி, அதன் தலைவர், செயலாளர், பொருளாளர், உறுப்பினர் எண்ணிக்கையளவு, அவர்களில் பிரிவு இருந்தால் அந்தத் தகவல், வட்டார அலகுகள், மக்களவை அல்லது வேறு ஏதேனும் மாநில சட்டமன்றத்தில் சார்பு செய்த உறுப்பினர் உண்டா? ஆம் எனில் அது குறித்த தகவல், அந்த அமைப்பு / கட்சிக்குள் வேறுபட்ட கருத்து தோன்றினால் அதைத் தீர்க்கும் தீர்மானங்கள் (Dispute resolution) பற்றிய தகவல்கள் ஏதும், அதன் விதிகளில் பின்னாளில் மாற்றம் கொண்டு வரவேண்டும் எனில் அதைக் கொண்டு வரும் முறை பற்றிய தகவல்கள், வேறு கட்சியுடன் இணைக்கவிரும்பும் காலத்தில் அதைச் செய்ய வேண்டியமுறை குறித்த விதிகள், இணைப்பது, பிரிவது, கட்சி/அமைப்பை கலைப்பது ஆகியவை ஏறுபடுங்கால் அதைச் செய்ய வேண்டிய முறை குறித்த விதிகள் அனைத்தும். இவை போக, அந்த கட்சியின் விதிகள், விதிகளின் விவரக் குறிப்புகள், இவை எல்லாம் போக, அந்தக் கழகம்/கட்சி/அமைப்பு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கைகொண்டிருக்கிறது என்றும், சமூகப் பொதுவுடமை, மதச் சார்பின்மை மற்றும் ஜனநாயகம் இவற்றின் மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றது எனவும், இந்தியாவின் ஒருமைப்பாடு, இறையாண்மையைப் பாதுகாக்க கருத்தும் கொண்டிருப்பதாக இருக்க வேண்டும்.

தேர்தல் ஆணையமானது, தான் பொருத்தமெனக் கருதும், அத்தகைய பிற விவரங்களைக் கழகம் /கட்சி/அமைப்பிடமிருந்து கேட்டுப் பெறலாம். அத்தோடு, தேர்தல் ஆணையம் நிர்ணயிக்கும் தொகையினை வரைவோலையாக (தற்பொழுது ரூபாய்.10,000) விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். இந்த தகவல்கள் எல்லாவற்றையும் பெற்ற பிறகு, தேர்தல் ஆணையம் விண்ணப்பித்த அந்த குழு/அமைப்பு/கழகத்தை கட்சியாக ஏற்பதா வேண்டாமா என்பதைக் குறித்து முடிவு செய்து, பின்னர் அந்த முடிவை, அந்த அமைப்பிற்குத் தகவல் தரும். அந்த அமைப்பு, ஆணையம் குறிப்பிடும் காப்புரைகளுக்கு அனுசரித்திருக்க வேண்டும் என்பதே முக்கியமாக கவனிக்கப்படும்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (Representation of the People Act 1951)-ல் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினருக்கான தகுதிகள் வரையறை செய்யப்பட்டிருக்கின்றது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் பாகம்- VI A ல் அரசியல் கட்சிகள் பதிவு செய்தல் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது

பகுதி-VI A

அரசியல் கட்சிகள் பதிவு செய்தல்

(REGISTRATION OF POLITICAL PARTIES)

பிரிவு 29A. சங்கங்கள்/ கழகங்கள் மற்றும் அமைப்புகள் அரசியல் கட்சிகளாக தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்தல்: ( Registration with the Election Commission of associations and bodies as political parties)

  1. அரசியல் கட்சியென தன்னை அழைத்துக் கொள்ளும் ஏதேனும் கழகம் அல்லது தனிப்பட்ட இந்திய குடிமக்களின் அமைப்பு மற்றும் இந்தப் பகுதியின் வகையங்களை தான் பயன்படுத்திக் கொள்ள எண்ணம் கொண்டது, இந்தச் சட்டத்தின் நோக்கங்களுக்கான அரசியல் கட்சி என பதிவு செய்து கொள்ள தேர்தல் ஆணையத்திற்கு விண்ணப்பம் செய்தல் வேண்டும்.

  2. அத்தகைய விண்ணப்பம் ஒவ்வொன்றும் ;-

  3. கழகம் அல்லது அமைப்பானது, மக்கள் பிரதிநிதித்துவச் (திருத்தச் சட்டம்) 1988 தொடக்கத்தின் போது நிகழ்நிலையில் இருப்பின், அத்தகைய தொடக்கத்தைத் தொடர்ந்த அடுத்த 60 நாட்களுக்குள்:

  4. கழகம் அல்லது அமைப்பானது அத்தகைய தொடக்கத்திற்கு பின்னர் அமைக்கப்பட்டிருப்பின், அமைக்கப்பட்ட தேதியினைப் பின் தொடர்ந்து அடுத்த 30 நாட்களுக்குள் விண்ணப்பம் செய்யப்படுதல் வேண்டும்

  5. உட்பிரிவு(3) (1) இன் கீழான ஒவ்வொரு விண்ணப்பத்திலும் கழகம் அல்லது அமைப்பின் தலைமை செயல் அலுவலரால் (அத்தகைய தலைமைச் செயல் அலுவலர், செயலாளர் என அல்லது வேறு எந்தப் பதவிப் பெயருடன் அழைக்கப் பட்டாலும்) கையாப்பமிடப்படுதல் வேண்டும், மற்றும் ஆணையத்தின் செயலருக்கு முன்னிடப்படுதல் வேண்டும் அல்லது அத்தகைய செயலருக்கு பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்படுதல் வேண்டும்)

  6. அத்தகைய ஒவ்வொரு விண்ணப்பமும் பின்வரும் விவரங்களைக் கொண்டிருத்தல் வேண்டும் அவையாவன:-

  7. கழகம் அல்லது அமைப்பின் பெயர்

  8. அதன் தலைமையகம் அமைந்துள்ள மாநிலம்;

  9. அதற்கான கடிதங்கள் மற்றும் தகவல்கள் அனுப்ப வேண்டிய முகவரி

  10. தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் பிற பதவி உறுப்பினர்களின் பெயர்கள்

  11. உறுப்பினர்களின் எண்ணிக்கை பலம் மற்றும் உறுப்பினர்களின் பிரிவு இருப்பின், ஒவ்வொரு பிரிவின் எண்ணிக்கை பலம்

  12. ஏதேனும் வட்டார அலகுகள் உண்டா? ஆம் எனில் எந்த நிலைகளில்;

  13. மக்களவை அல்லது வேறு ஏதேனும் மாநில சட்டமன்றத்தில் சார்பாற்றம் செய்திடும் உறுப்பினர் அல்லது உறுப்பினர்கள் உண்டா? ஆம் எனில் அத்தகைய உறுப்பினர் அல்லது உறுப்பினர்கள் எண்ணிக்கை

  1. உட்பிரிவு (1) இன் கீழ் விண்ணப்பமானது, கழகம் அல்லது அமைப்பின் விதிகள் மற்றும் அத்தகைய விதிமுறைகளின் விவரக் குறிப்புகள் கொண்டிருத்தல் வேண்டும் மற்றும் அத்தகைய விதிகள் மற்றும் விதிமுறைகளில், கழகம் அல்லது அமைப்பு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீது உண்மையான நம்பிக்கையும் பற்றுறுதியும்கொண்டிருக்கிறது என்றும் சமூகப் பொதுவுடமை, மதச் சார்பின்மை மற்றும் ஜனநாயகத்தின் பால் நம்பிக்கை மற்றும் இந்தியாவின் இறையாண்மை, ஒருமைபாட்டினை பேணிக் காப்பதற்கும் ஓர் வகையத்தினை கொண்டிருத்தல் வேண்டும்.

  2. ஆணையமானது தான் பொருத்தமெனக் கருதும் அத்தகைய பிற விவரங்களை கழகம் அல்லது அமைப்பிடமிருந்து கோரலாம்.

  1. ஆணையமானது, தன் கையுடைமையில் உள்ள அனைத்து விவரங்கள் மற்றும் வேறு அவசியமான மற்றூம் தொடர்புடைஅ காரணக் கூறுகளையும் பரிசீலித்த பின்னர், கழகம் அல்லது அமைப்பினை இந்தப் பகுதியின் நோக்கங்களுக்காக அரசியல் கட்சியாக பதிவு செய்வதா அல்லது செய்வதில்லையா என்பதை முடிவு செய்திடும் மற்றும் ஆணையம் அதன் முடிவினை கழகம் அல்லது அமைப்பிற்கு தெரிவித்தல் வேண்டும்

வரம்புரையாக, அத்தகைய கழகம் அல்லது அமைப்பின் விதிகள் அல்லது விதிமுறைகள் உட்பிரிவு (5) இன் காப்புரைகளுக்கு அனுசரித்து இருந்தாலன்றி, எந்தவொரு கழகம் அல்லது அமைப்பு இந்தப் பிரிவின் கீழ் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படமாட்டாது.

  1. ஆணையத்தின்முடிவு இறுதியானதாகும்.

  1. மேற்சொன்னவாறு, ஓர் கழகம் அல்லது அமைப்பு அரசியல்கட்சியாக பதிவு செய்யப்பட்ட பின்னர், அதன் பெயர், தலைமை அலுவலகம், அலுவலக நிர்வாகிகள், முகவரி அல்லது ஏதேனும் பிற முக்கிய விஷயங்களில் ஏதேனும் மாற்றம் இருந்தால், காலந்தாழ்வின்றி ஆணையத்திற்கு தெரிவிக்கப்படுதல் வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT