ஆராய்ச்சிமணி

கோயில் இடத்தில் கொட்டப்படும் குப்பைகள்

DIN

பெருநகர சென்னை மாநகராட்சி 109-ஆவது வட்டம் சூளைமேடு கங்கையம்மன் கோயில் தெருவில், கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் குப்பைகள் அருகில் வசிப்பவர்களால் கொட்டப்படுகின்றன. இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு, அந்த இடம் புழு, பூச்சிகளின் கூடாரமாக உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி புகார் எண் 1913, பகுதி உதவி செயற்பொறியாளர், மண்டல அதிகாரி ஆகியோரிடம் பலமுறை புகார் செய்தும் எவ்வித பலனும் இல்லை. மேலும், இந்தக் காலி மனையில்தான் 16-ஆம் நாள் காரியம், வருடாந்திர சடங்குகள் ஆகியவற்றை பகுதி வாழ் மக்கள் மேற்கொள்கின்றனர். எனவே, அந்த இடத்தில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்க பெருநகர மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 கோதை ஜெயராமன், சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT