தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 608

ஹரி கிருஷ்ணன்

உபதேசம் செய்தருளவேண்டும் என்று கோருகின்ற இந்தப் பாடல் வயலூருக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 31 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும்; இரண்டு, ஐந்து, எட்டு ஆகிய சீர்களில் இரண்டு நெடிலோடு தொடங்கும் மூன்றெழுத்துகளும்; மூன்று, ஆறு, ஒன்பது ஆகிய சீர்களில் ஒரு நெடில், ஒரு குறில், (கணக்கில் வராத) ஒரு மெல்லொற்று என்ற விதத்தில் அமைந்துள்ளன.

தனதன தானான தானந் தனதன தானான தானந் 
                      தனதன தானான தானந்  தனதான
அரிமரு கோனேந மோவென் றறுதியி லானேந மோவென்
                      றறுமுக வேளேந மோவென் றுனபாதம்  
அரகர சேயேந மோவென் றிமையவர் வாழ்வேந மோவென்
                      றருணசொ ரூபாந மோவென் 
றுளதாசை
பரிபுர பாதாசு ரேசன் றருமக ணாதாவ ராவின்
                      பகைமயில் வேலாயு தாடம் பரநாளும்
பகர்தலி லாதாளை யேதுஞ் சிலதறி யாவேழை நானுன்
                      பதிபசு பாசோப தேசம் பெறவேணும்
கரதல சூலாயு தாமுன் சலபதி போலார வாரங்
                      கடினசு ராபான சாமுண் டியுமாடக்
கரிபரி மேலேறு வானுஞ் செயசெய சேனாப தீயென்
                      களமிசை தானேறி யேயஞ் சியசூரன்
குரல்விட நாய்பேய்கள் பூதங் கழுகுகள் கோமாயு காகங்
                      குடல்கொள வேபூச லாடும் பலதோளா
குடதிசை வாராழி போலும் படர்நதி காவேரி சூழுங்
                      குளிர்வய லூராழி மேவும் பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

SCROLL FOR NEXT