தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 612

ஹரி கிருஷ்ணன்

மனோலய அனுபூதி—மனம் ஒடுங்கிய சமாதி அனுபூதி—நிலையை வேண்டுகின்ற இந்தப் பாடல் விராலி மலைக்கு உரியது.

அடிக்கு ஒற்றொழித்து 33 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  இப்பாடலில் ஒன்று முதல் ஐந்து வரை எல்லாச் சீர்களிலும் சம அளவில் நான்கெழுத்துகளும்; ஒவ்வொரு சீரிலும் இரண்டாம் எழுத்து நெடிலாகவும்; ஆறாம் சீரில் இரண்டாமெழுத்து நெடிலாக அமைந்திருப்பினும் இதில் மட்டும் ஐந்தெழுத்துகளும் பயில்வதைக் காணலாம்.

தனாதன தனாதன தனாதன தனாதன
             தனாதன தனாதனன  தனதான

இலாபமில் பொலாவுரை சொலாமன தபோதன
                        ரியாவரு மிராவுபக லடியேனை

இராகமும் விநோதமு முலோபமு டன்மோகமு
                        மிலானிவ  னுமாபுருஷ னெனஏய

சலாபவ மலாகர சசீதர விதாரண
                        சதாசிவ மயேசுரச கலலோக

சராசர வியாபக பராபர மநோலய
                        சமாதிய நுபூதிபெற நினைவாயே

நிலாவிரி நிலாமதி நிலாதவ நிலாசன
                        நியாயப ரிபாலஅர நதிசூடி

நிசாசர குலாதிப திராவண புயாரிட
                        நிராமய சரோருகர னருள்பாலா

விலாசுகம் வலாரெனு முலாசவி தவாகவ
                        வியாதர்கள் விநோதமகள் மணவாளா

விராவுவ யலார்புரி சிராமலை பிரான்மலை
                        விராலிம லைமீதிலுறை பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

SCROLL FOR NEXT