இந்த நாளில்...

24.11.1969: சந்திரனுக்குச் சென்ற அப்பல்லோ 12 விண்கலம் பசிபிக் கடலில் பத்திரமாக தரையிறங்கிய தினம் இன்று!

நிலவில் விண்வெளி வீரர்களை அனுப்பி ஆய்வுகளை செய்யும் அமெரிக்காவின் எண்ணத்தின்படி 'அப்பல்லோ திட்டம்' தொடங்கப்பட்டது.

DIN

நிலவில் விண்வெளி வீரர்களை அனுப்பி ஆய்வுகளை செய்யும் அமெரிக்காவின் எண்ணத்தின்படி 'அப்பல்லோ திட்டம்' தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் அப்பல்லோ-12 அமெரிக்காவின் ஆறாவது விண்பயணமாகும். நிலவில் இறங்கி ஆய்வு செய்யும் வரிசையில்  இது இரண்டாவது கலனாகும். அப்பல்லோ 11 ஏவப்பட்ட நான்கு மாதங்கள் கழித்து நவம்பர் 14, 1969 அன்று புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து இந்த விண்கலம் ஏவப்பட்டது.

நிலவில் தரை இறங்கிய பின்பு குழுவின் தலைவர் சார்லசு பீட் கன்ராட் , விமானி ஆலன் எல். பீன் ஆகிய இருவரும் நிலவின் தரைப்பரப்பில் திட்டமிட்ட ஆய்வுகளை முடித்தனர். மற்றொரு விமானி ரிச்ச்ர்டு எஃப். கோர்டான் நிலவின் சுற்றுவட்டப்பாதையிலேயே இருந்தார்.

நிலவுப்பரப்பின் தென்கிழக்குப் பகுதியில் தரையிறங்குவது இந்த திட்டத்தின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. மேலும் அதற்கு முன் ஏவப்பட்ட சர்வேயர் 3 கலனைக் கண்டுபிடித்து பரிசோதனைக்காக எடுத்து வருவதும் இதன் திட்டமாக இருந்தது.

குறிக்கோள்கள் அனைத்தும், வெற்றிகரமாக முடிவடைந்த பின்பு, நவம்பர் 24, 1969 அன்று அப்பலோ விண்கலமானது  பசிபிக் கடலில் பத்திரமாக தரையிறங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை! - தேஜஸ்வி யாதவ் பரபரப்பு குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT