இந்த நாளில்...

02.01.1959: உலகின் முதல் விண்கலமான லூனா-1 விண்வெளிக்கு ஏவப்பட்ட தினம் இன்று!

DIN

லூனா 1 என்பது சோவியத் ஒன்றியத்தினால் உருவாக்கப்பட்ட விண்கலம் ஆகும். இது ஜனவரி 2 1959 இல் விண்வெளிக்கு ஏவப்பட்டது.

கோள வடிவில் அமைந்த இக்கலமானது அதன் மேற்பகுதியில் ஐந்து அன்டெனாக்கள் பொருத்தப்பட்டதாக அமைந்திருந்தது. இது சந்திரனின் மேற்பரப்பில் மோதுவதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்த விண்கலமே மனிதனால் வடிவமைக்கப்பட்ட பூமியின் மேற்கட்ட பரப்பை தாண்டிச் சென்ற முதலாவது விண்கலமாகும். ஜனவரி 3-இல் பூமியில் இருந்து 113,000 கி.மீ. தூரத்தில் இக்கலத்தில் இருந்து மிகப் பெரிய சோடியம் வாயுக்கலவை ஒன்று வெளியேறியதில் இக்கலம் ஒரு செயற்கை வால்வெள்ளி (comet) போலத் தோற்றமளித்தது.

லூனா 1 சந்திரனின் மேற்பரப்பிலிருந்து 5995 கிமீ தூரத்துக்குள் அமைந்த தன்னுடைய மோதலுக்குண்டான பகுதியை ஜனவரி 4-இல் எட்டியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

SCROLL FOR NEXT