கவிதைமணி

மழைநீர் போல: பாவலர் கருமலைத்தமிழாழன்

கவிதைமணி
விண்ணிருந்து   பெய்கின்ற   மழைநீர்   வெற்பில்            விழுந்தருவி  யாய்மாறிக்  கொட்டிக்  கீழேமண்மீது   பாய்கின்ற   ஆறாய்   ஓடி            மழலையென   நடக்கின்ற   நதியாய்  ஆகிக்கண்மாயாய்   ஏரிகுளம்   நிரம்ப   வைத்துக்            கருத்தாக   ஊற்றுவர   உள்ளி   றங்கிஉண்ணபயிர்   குடிநீரை   அளித்தல்   போல            உன்வாழ்வைப்  பிறர்க்களிப்பாய்   உலகம்  போற்றும் !மாசின்றிப்  பெய்கின்ற   மழைநீர்   போன்று            மனத்திற்குள்   களங்கமின்றித்   தூய்மை  யோடுநேசித்தே  எல்லோர்க்கும்   நன்மை   செய்யின்            நேர்காணும்   கல்வெட்டாய்   பெயர்நி   லைக்கும் !வாசிக்கும்  நூல்கொடுக்கும்   பயனாய்   உன்றன்            வாழ்வமைப்பாய்   மழைநீரின்   தன்மை   யோடேஏசியுனைத்   தூற்றுவோர்கள்   யாரு   மின்றி            எல்லோரும்   உன்புகழைப்   பாடி  நிற்பர் !தனக்கென்ன   பயன்கிடைக்கும்   என்றெண்   ணாமல்            தன்னலமே   இல்லாமல்   பொதுமை  யாகவனம்நாடு   வேறுபாடு   பார்த்தி   டாமல்            வல்லவனோ   நல்லவனோ   அனைவ   ருக்கும்மனம்மகிழப்   பெய்துவளம்   கூட்டு   கின்ற            மழைநீரைப்   போல்நீயும்   வாழ்வ   மைப்பாய் !தினமுன்னை   இவ்வுலகம்   நினைந்து  போற்றும்            திருவாழ்வு   வாழ்ந்திட்ட   நிறைவு  கிட்டும் !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் துப்பாக்கிச் சண்டை: ஒருவா் உயிரிழப்பு; 3 போ் காயம்

ருதுராஜ், தேஷ்பாண்டே அசத்தல்: வெற்றியுடன் மீண்டது சென்னை

விருதுநகா் சந்தை: உளுந்து, துவரம் பருப்பு விலை உயா்வு

நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: பாஜகவினா் மீது புகாா்

வாக்கு எண்ணிக்கை மையம் பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை

SCROLL FOR NEXT