கவிதைமணி

மழை நீர் போல: சீர்காழி.ஆர் .சீதாராமன்

கவிதைமணி

ஆறு குளம் கடல் மண் 
எதுவானாலும் எளிதில் கலந்து
சங்கமம் ஆகும் ஒப்பற்ற 
சமத்துவ குணம் கொண்ட
மழை நீர் போல வாழ்க்கை

ஏக்கத்தையும் தாக்கத்தையும்
ஏற்படுத்த கூடியது எப்படி
வரும் என்ற நிலை தெரியாதது
மழை நீர் வானத்து புதுநீர் " .

மனதை மண்ணை குளிர்வித்து
போற்றி வழிபடும் தெய்வம்
வரவை வழிமேல் விழி  வைத்து 
தேட வைக்கும் உயிர்
தேடல் மழைநீர் போலவே

பிரார்த்தனை பல கண்டதும்
மனம் இறங்கி குளிர்விக்கும்
கொடையாளி  தியாகி 
மழை நீர் போல வழிகாட்டி " 

சேருகின்ற இடத்தில் தன்
குணம் விட்டு இடம் தன்மை மாறி 
பயணிக்கும்  உன்னத 
தன்மை கொண்ட மழை நீர்
போல வேறு இல்லை என்றும் " 

மழை நீர்     போல  உறவு 
கொண்டாடி தயாள குணத்தால்
தரணி செழிக்க நாமும் வாழ்வோம் 
மழை நீர் போல

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT