கவிதைமணி

பெண் என்னும் பிரபஞ்சம்: சாந்தி உடையப்பன்

கவிதைமணி

வாழ்க்கைச் சக்கரத்தின்
வலுவான அச்சாணி
'மாயை' என்னும் தூற்றலை
முறத்தால் அடித்த மறத்தி 
ஆக்கத்தின் அகராதி
அலங்கரித்துக் கொண்டது அவளால்
மகளாகப் பிறந்து
மாமியார் வரைப் பரிமாணங்கள் இதோ....

'மகள்'
பெற்றோர் மனக் கருவறையில் 
பிரவாகம் கொண்ட பொக்கிஷம்
பாட்டியானாலும்
பார்வைக்குக் குழந்தை!
பிறந்தவீட்டு அன்பே மகள்
பெற வேண்டிய சீதனம்
அன்புச்சீதனத்தை ஆரத்தழுவி 
அர்த்தப்படுத்துவோம் பிறப்பை!

'சகோதரி'
வளரும் போது
பகிர்ந்துண்ணும் பாசத்தை
வாக்கப்பட்ட பின்போ
வார்த்துச் சிறப்பித்தல் அவளின் கையில்
கஷ்டங்களில் தோள் கொடுத்து
கரை சேர்ப்போம் உடன்பிறப்புகளை!

'மனைவி'
பெண்ணின் பரிமாணங்கள் அத்துணையும்
பொதிந்துள்ள ஒரே பாத்திரம்
தாம்பத்யத்தின் தாரகமந்திரம்
தன்னகத்தே கொண்ட வேதம்
ஒப்பற்ற பெருமையோடு
ஓதிச் சிறப்பிப்போம் தரணி உயிர்த்திருக்க!

'மருமகள்'
ஆறாம் அறிவைச் சிறப்பிக்க
அவதரிக்க வேண்டிய அவதாரம்
முதிர்ச்சி என்னும் 
முத்துக் கோர்த்த
ஆபரணம் அணிந்து
முதியோர் இல்லங்களுக்கு 
மூடுவிழா கண்டிடுவோம்!

'தாய்'
முத்தின தமிழாழுமே இதன் அழகை
முழுமையாகச் சொல்லுதல் கடினம்
அத்துணை பவித்திரம்
அத்துணையும் பவித்திரம்
பேராற்றலே பெருமை கொள்ளும்
பார் ஆற்றல் கொண்டவள்
நல்லவற்றை விதைத்து
நாடு போற்ற வளர்த்து
சான்றோர் ஆக்குவோம் 
சந்ததிகள் அனைத்தையும்!

'மாமியார்'
போற்றுதலுக்குரிய 
அறிவின் பெருங்கணக்கு
விட்டுக் கொடுத்தலை
விளங்கிக் கொண்டால் சிறப்பு
வரதட்சணைப் பேய்க்கு
வைத்திடுவோம் சிதை!
மறு மகளாகப் பார்த்து
மலர்த்திடுவோம் உறவுகளை!

ஆக்கப் பிறந்தோம்
ஆளுவோம் தரணியை
ஆண்களின் அரவனணப்போடு!
நவ-சக்தி படைக்க
சிவசக்தியாவோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT