கவிதைமணி

கல்லறைப் பூவின் கண்ணீர் துளிகள்: கவிஞர் கே. அசோகன்

கவிதைமணி

கடவுளின்  காலடி தன்னில்
விழுந்திடுமா இல்லை!
கல்லறை மேலே விழந்திடுமா 
கவலையில்லை என்றனுக்கே!
            
மலர்வதும் மணப்பதும் 
எனக்கு இயல்புதான்!
மலர்ச்சியில் சிலிர்ப்பும்
மணத்தினில் லயிப்பும்
எனக்கான இயல்புதான்!

ஆயுள் குறைவெனினும்
அழகாய் மலர்வது இயல்பு
வயிற்றில்  அடித்தவனின்
கல்லறையிலும்…..
வாய்விட்டு சிரித்திடுவேனே!
            
காயத்தை மெய்யென்று
காலத்தைக் கடத்திடும் மனிதா!
காயமானபின் உன் கல்லறைமீது
நிற்பதும் எனக்கு மலர்ச்சிதான்!

ஓயா புறம்பேசி ஊரையடித்து
ஓராயிரம் இடம் நீ-சேர்த்தாலுமே
சாயுமிடம் இந்த கல்லறையே
சாமியும்---- ஆசாமியும் 
சரிநிகர் சமானமடா 
"கல்லறைப் பூக்களான” எங்களுக்கே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT