கவிதைமணி

கல்லறைப்பூவின் கண்ணீர்த்துளி: சா. கா. பாரதி ராஜா

கவிதைமணி

ஆண்!
பூவாய் உயிர்த்தெழுந்தான்
கல்லறையில்!

இதயத்தில் இடமளிக்க மறுத்த
அவளின் கூந்தலில்
இடம்பெற
பூவாய் உயிர்த்தெழுந்தான்!

கல்லறைப் பூக்கள்
கூந்தலைப் போய் சேராது
என்பதை மறந்து!

இரவினில் அவளையே
நினைத்து நினைத்து
அவன் விடும் கண்ணீர்துளிகள்
சிதறிக்கிடக்கிறது
பனித்துளிகளாக!

அவள் வருவதை உணர்ந்ததும்
அவன் தேகம் அசைகையில்
பறக்கின்றன சருகுகள்
அவளை வரவேற்க!

அவள் இடம் நகர்கையில்
அவனை நோக்கி இழுக்கிறது
கல்லறைத் தோட்ட காற்று!

ஒரு ரோஜாவை
வாங்க மறுத்தவள்!
குவிக்கிறாள்
ஆயிரம் ரோஜாக்களை
அவனின் காலடியில்!

அவள் விடும் கண்ணீர்துளிகளை
தாங்குகிறான் அவன்
கல்லறையிலும்!

கல்லறை
காதலறை ஆனது!
கண்ணீர்துளி
காதல் மொழியானது!

இறந்தும் வாழ்கிறது காதல்!
இறவா காதலாக!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT