கவிதைமணி

ஆறோடும் நீரோடும்;ச.கிறிஸ்து ஞான வள்ளுவன்

கவிதைமணி

வறண்ட மேகத்தையும்
மழையாய் அழ வைக்கும்
மந்திர சக்தி மரம்
பச்சை மரத்தை வெட்டாதே
பட்டமரத்தை வெட்டலாம் நீ
அருகில் ஒரு செடி நட்டால்
இப்படி நீ செய்தால்
இடைவிடாது மழை பெய்யும்.

மரத்தால் பெய்த மழையை
ஒரு சொட்டும் வீணாக்காது
ஏரி குளம் குட்டையென
எல்லாவற்றிலும் நீ தேக்கு
தேக்கும் நீரில் ஒரு பாதி
நிலத்தடி நீராகி உயருமே நீர்மட்டம்
மறுபாதி ஆவியாகி பெய்யுமே மழையாக...

மரத்தால் ஒரு மழை
தேக்கும் நீரால் மறுமழை
இருமழையின் நீர் தேங்கி
பெய்யுமே மூன்றாம் மழை
மாதம் மும்மாரி பெய்தால்
ஆறோடும் வழியெங்கும்
நீரோடும் வெள்ளமாக
நம் மனம் துள்ளுமே மகிழ்ச்சியாலே...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

திருவிழாவில் கோஷ்டி மோதல்: 10 பேருக்கு கத்திக்குத்து

ராமநாதபுரம் மாவட்ட சிறைகளில் நீதிபதி, ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT