கவிதைமணி

நதிக்கரையின் நினைவலைகள்:மாலதி சந்திரசேகரன்

கவிதைமணி

வெண்முகிலைக் காட்டி என்னுள் 
வினாக்குறியினை எழுப்பினாய்.
பென்னம்பெரிய கற்பனைகளுடன் 
என்னை பூபாளம் பாட வைத்தாய். 

பவித்திரமாய் காணப்பட்ட உன் 
மேனியில்தான் எத்தனை புன்மைகள்? 
பொல்லாத கனவுகளுக்கு 
மருண்டே நித்திரை தவிர்க்கிறேன். 

கழிவுகளையும், மரணித்த மக்களையும், 
மாக்களையும் அல்லவா சுமக்கிறாய்? 
கனலாய் கனன்று 
கண்ணீர் சிந்திக்கொண்டே 
நகைக்கிறேன்...!
காதலியே, ஆழியை நோக்கி நீ 
அன்னநடை பயிலுகிறாய். 
காலத்தின் கோலம், 
நினைவுகள் மட்டுமே 
நித்தியமாகின்ற அவலம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

டாஸ்மாக் கடை ஊழியா் மீது தாக்குதல்

மேம்பால தடுப்பின் மீது அரசுப் பேருந்து மோதி 5 போ் காயம்

வணிகா் தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT