கவிதைமணி

அந்த நாளே திருவிழா:  கு.முருகேசன்

கவிதைமணி

ஊரும் உறவும் கூடும் நாளா திருவிழா?
மேடும் பள்ளமும்!
ஏற்றமும் இறக்கமும்!
களையும் நாள் எந்நாளோ?
அந்த நாளே திருவிழா!

காவிரி தண்ணீர்
கழனியில் பாய்ந்து!
உழவன் கடனை தீர்ப்பது
எந்த நாளோ?

அந்த நாளே திருவிழா!
விதைத்த விதைகள்
பலவாய் பெருகி
விளைச்சலாகி வீடு வருவது
எந்த நாளோ ?

அந்த நாளே திருவிழா!

சிவகாசி மத்தாப்பு
ஒளி விட்டு சிரிக்கும்
அந்த  நாளா திருவிழா!

சிவகாசி பட்டாசு
செய்பவன் வாழ்வில்

சிரிக்கும் நாள் எந்நாளோ ?
அந்த நாளே திருவிழா!

உடல் அழுக்கு போக
குளிக்கும் நாளா
திருவிழா?

உள்ளத்தின் அழுக்கு போக
குளிக்கும் நாள் எந்நாளோ?
அந்த நாளே திருவிழா!

ஊழல் ஒழிந்து
லஞ்சம் ஒழிந்து
நேர்மை தழைப்பது
எந்த நாளோ?

அந்த நாளே திருவிழா!
ஏரு பிடித்து! எருது விரட்டி!
சோறு பொங்கும்!

அந்த நாளா திருவிழா?
பிடித்த ஏழ்மையை விரட்டி!
மகிழ்ச்சியை பொங்கும் நாள்
எந்த நாளோ?

அந்த நாளே திருவிழா!  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

அதிகரிக்கும் தொண்டை வலி, காய்ச்சல்: பருவகால நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

SCROLL FOR NEXT