கவிதைமணி

நினைவுப்பெட்டகம் 2017: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி 

கவிதைமணி

விண்ணில் கோள்களால்
ஒரு கோலம் –
"அக்னி"ப்பரீட்சையில்
அசகாய வெற்றி –
மக்களை அணைத்தபடி
மேலே பறந்தன
மெட்ரோ ரயில்கள் – 
சுற்றத்திற்குச் சுகமாய்
காகிதப்பைகளின் ஜனனம் -
காகிதமும் வேண்டாம்
கருத்துப்பரிமாற்றத்திற்கு
கணினியின் உதயம் -
விளையாட்டு வைபவங்கள் பல
சளைக்காமல் வென்றவர் சிலர் –
தேவை தான் என்று வந்தது
சேவை வரி –
புயல், வெள்ளம்
புரட்டிப்போட்டது மக்களை –
கடலிற்குள் ஒரு ஊடுருவல்
கணக்கிலடங்கா பிணங்கள் –
இப்படி பலப்பல --
நினைவுப் பெட்டகத்தில்
எண்ணத் துணிகளை
மடித்து வைத்த  படி நான் –
காலம் சுழன்றது
காலெண்டர் முடிந்தது
நினைவிலும் வேண்டாம் ,
வரும் ஆண்டிலும் வேண்டாம்,
பிஞ்சுகள் முன்னூறு
பிராண வாயு குறைய
பிரிந்தன நம்மை விட்டு –
இது மட்டும் கனவாகவே இருக்கட்டும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT