கவிதைமணி

கொஞ்சி விளையாடும் கோபம்: சு.தங்கமணி 

கவிதைமணி

என் மலருக்கு என்மேல் கோபமோ!?
என் மலரே!

உன் சிவந்த முகம் கண்டு
தேன் சொட்டும் பூவிதழ் என கருதி 
தேன் எடுக்க வந்த தேனீக்கள்
உன் தலைவன் நான் என உணர்ந்து
என்கண் வருந்தி பணிந்து சென்றதை
நீ அறிவாயோ!?

என் முகம் பார்க்காமல் 
நீ காட்டும் கோபம்
நீ அறியாமல் - நான்
ரசிக்கும் உன் முகம் அல்லவோ!?

நீ என்னை அழகாய் அடிப்பதும்
நான் உன்னை அன்போடு அனைப்பதும் 
நான் பெற்ற பேறு அல்லவோ!?

நான் கொஞ்ச
நீ கொள்ளும் இந்த அன்புக்கோபம் 
எனக்கான பெரும் கொடுப்பினை அல்லவோ!?

அன்பே உன்பால்
பெண்ணின் மடம் என்ற மொழிக்கு
மறுமொழி அறிந்தேன்- இவை 
அனைத்தும் அறிந்தும் 
என்பால் ஒன்றும் அறியாதவளாய்!!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT