நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து நான்காம் திருவாய்மொழி - 8

செ.குளோரியான்

நீஅலையே சிறுபூவாய்! நெடுமாலார்க்கு என்தூதாய்
நோய்எனது நுவல்என்ன நுவலாதே இருந்தொழிந்தாய்,
சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனிஉனது
வாய்அலகில் இன்அடிசில் வைப்பாரை நாடாயே.

சிறிய நாகணவாய்ப்பறவையே,

'நெடுமாலான எம்பெருமானிடம் என்னுடைய தூதாகச் சென்று எனது நோயைச் சொல்' என்று நான் உன்னைக் கேட்டேன். ஆனால் நீயோ அவ்வாறு செல்லாமல் இருந்துவிட்டாய்.

இதனால், என்னுடைய சாயல் கெட்டது, அழகிய மாமைநிறமும் கெட்டது.

இனி உன்னை யார் கவனித்துக்கொள்வார்கள்? உன்னுடைய வாயில் இனிய உணவை ஊட்டவல்லவர்களை நீயே தேடிக்கொள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 77,848 பக்தா்கள் தரிசனம்

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

கோடை விடுமுறை: விமான சேவைகள் அதிகரிப்பு

உதகை, கொடைக்கானல்: வாகனங்கள் இன்றுமுதல் இ-பாஸ் பெறலாம்

மின் வாரிய ஆள்குறைப்பு ஆணைகளை ரத்து செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT