நாள்தோறும் நம்மாழ்வார்

மூன்றாம் பத்து முதல் திருமொழி - பாடல் 3, 4

செ.குளோரியான்

பரஞ்சோதி, நீ பரமாய் நின் இகழ்ந்து மற்று ஓர்
பரஞ்சோதி இன்மையின் படி ஓவி நிகழ்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படர்உலகம் படைத்த எம்
பரஞ்சோதி, கோவிந்தா, பண்புஉரைக்கமாட்டேனே!

உயர்ந்த ஒளிவடிவானவனே, நீ சிறந்த தெய்வமாக இருக்கிறாய், உன்னைத் தவிர இன்னொரு பெரிய சோதிவடிவம் ஏதும் இங்கே இல்லை என்னும்படியாக நீ திகழ்கிறாய், உனக்குள்ளே பரந்த உலகங்களைப் படைத்த எங்கள் பரஞ்சோதியே, கோவிந்தா, உன்னுடைய பண்புகளை என்னால் விவரிக்க முடியவில்லையே!

•••

பாடல் - 4

மாட்டாதே ஆகிலும் இம்மலர்தலை மாஞாலம் நின்
மாட்டுஆய மலர்புரையும் திரு உருவம் மனம்வைக்க,
மாட்டாத பலசமய மதிகொடுத்தாய், மலர்த்துழாய்
மாட்டே நீ மனம்வைத்தாய், மாஞாலம் வருந்தாதே?

மலரிலே அமர்ந்த பிரம்மனால் படைக்கப்பட்டது இந்தப் பெரிய உலகம், இதில் வாழ்கிறவர்கள் மலர் போன்ற உன்னுடைய திருவுருவத்தை நெஞ்சில் வைத்து வணங்க இயலாதவர்கள்.

ஆனால் நீயோ, அவர்கள் மேலும் குழப்பமடையும்படி பல மதங்களை உருவாக்கினார், அவற்றைப் பற்றிச் சிந்திக்கும் புத்தியை அவர்களுக்குக் கொடுத்தாய், இதையெல்லாம் செய்துவிட்டு, நீ துளசிமலர் மாலையில் விருப்பம் கொண்டாய், (ஏதும் தெரியாதவன்போல் இருக்கிறாய்), இதனால் உலகம் வருந்தாதோ? (நீயே தனித்தெய்வம் எனும் கருத்தை அவர்களுக்குப் புரியவைப்பாய்.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

SCROLL FOR NEXT