நாள்தோறும் நம்மாழ்வார்

நான்காம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 9, 10

செ.குளோரியான்

பாடல் - 9

மேகலையால் குறைஇல்லா மெலிவு உற்ற அகல் அல்குல்
போகமகள் புகழ்த்தந்தை விறல்வாணன் புயம் துணித்து
நாகம் மிசைத் துயில்வான்போல் உலகுஎல்லாம் நன்கு ஒடுங்க
யோகு அணைவான் கவராத உடம்பினால் குறைஇலமே.

மேகலை அணிந்த, மெலிந்த, அகன்ற இடுப்பைக்கொண்டவள் உஷை, இன்பத்துக்கு ஏற்றவள், அந்த உஷையின் தந்தை, வெற்றி பொருந்திய வாணாசுரன், உஷையும் அநிருத்தனும் சேர்ந்ததால், வாணாசுரன் அநிருத்தனைச் சிறைவைத்தான், அவனை மீட்பதற்காக, வாணாசுரனின் தோள்களைத் துண்டித்தான் கண்ணன், அந்தக் கண்ணன், உலகமெல்லாம் நன்மை பெறுவதற்காக, பாம்புப் படுக்கையிலே தூங்குவதுபோல யோகநித்திரை செய்கின்றான், அத்தகைய பெருமான், என்னுடைய உடம்பைக் கவர்ந்துகொள்ளவில்லை. ஆகவே, இந்த உடம்பால் எனக்கு எந்தப் பயனும் இல்லை.

******

பாடல் - 10

உடம்பினால் குறை இல்லா உயிர் பிரிந்த மலைத்துண்டம்
கிடந்தனபோல் துணிபலவா அசுரர் குழாம் துணித்து உகந்த
தடம் புனல் சடை முடியன் தனி ஒரு கூறு அமர்ந்து உறையும்
உடம்பு உடையான் கவராத உயிரினால் குறைஇலமே.

உடல் வலிமை மிகுந்த அசுரர்களின் உயிரைப் போக்கி, அவர்களை வெறும் மலைத்துண்டுகளைப்போல் அங்குமிங்கும் சிதறிக் கிடக்கச் செய்தான், சடையிலே பரந்த கங்கை நதியைக்கொண்ட சிவபெருமானைத் தன் உடலில் ஒரு பகுதியாகக் கொண்டான், அத்தகைய பெருமான், என்னுடைய உயிரைக் கவர்ந்துகொள்ளவில்லை. ஆகவே, இந்த உயிரால் எனக்கு எந்தப் பயனும் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

SCROLL FOR NEXT