நாள்தோறும் நம்மாழ்வார்

நான்காம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 3, 4

செ.குளோரியான்

பாடல் - 3

பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து, அன்று உடனே
                                                                                     விழுங்கிக்
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும்
                                                                                     தெளியகில்லீர்,
சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூர் அதனுள்
பரன் திறம் அன்றிப் பல் உலகீர், தெய்வம் மற்று இல்லை,  

                                               
பல்வேறு சிறந்த தெய்வங்களையும், அவர்கள் வாழ்வதற்குரிய பல உலகங்களையும் படைத்தவன் எம்பெருமான், அன்று பிரளயத்தின்போது அவ்வுலகங்களை ஒன்றாக விழுங்கி மறைத்தவன், பின்னர் அதனை உமிழ்ந்து காத்தவன், வாமனனாக அவதாரமெடுத்து உலகை அளந்தவன், வராகமாக அவதாரமெடுத்து அதனை இடந்து எடுத்தவன், பலவகைப்பட்ட உலகில் வாழும் மக்களே, இதையெல்லாம் பார்த்த பிறகும் உங்களுக்குத் தெளிவு ஏற்படவில்லையா? அமரர்கள் தலையாலே வணங்குகிற திருக்குருகூரிலே எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கு ஆளாகாமல் சுதந்தரமாக இயங்கும் இன்னொரு தெய்வம் இல்லை, அப்படி இருந்தால் சொல்லுங்கள்.

******

பாடல் - 4

பேசநின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே, கபால நல் மோக்கத்துக்
                                                                         கண்டுகொண்மின்,
தேச மாமதிள் சூழ்ந்து அழகாய திருக்குருகூர் அதனுள்
ஈசன்பால் ஓர் அவம் பறைதல் என் ஆவது
                                                                        இலிங்கியர்க்கே.

பேசப்படுகின்ற சிவன், பிரமன், பிற தேவர்களுக்கெல்லாம் நாயகன் எம்பெருமான்தான், சிவனின் கையில் ஒட்டியிருந்த கபாலத்துக்குத் திருமால் நல்ல மோட்சத்தை வழங்கியதைக் கண்டு இதனை உணர்ந்துகொள்ளுங்கள். ஒளி நிறைந்த, பெரிய மதிள் சுவரால் சூழப்பட்ட அழகிய திருக்குருகூரினுள்ளே எழுந்தருளியிருக்கிறான் எம்பெருமான், அத்தகைய பெருமானைப்பற்றி, இலிங்கியர்கள் (அனுமானத்தை முதன்மையாகக் கொண்டு வாதிடுவோர்) தவறான சொற்களைச் சொல்கிறார்கள், அதனால் அவர்களுக்கு என்ன பயன் வந்துவிடும்? (ஏதும் வராது.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT