நாள்தோறும் நம்மாழ்வார்

மூன்றாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 11

செ.குளோரியான்

கூடி வண்டுஅறையும் தண் தார்க்
கொண்டல்போல்வண்ணன்தன்னை
மாடு அலர் பொழில் குருகூர்
வண் சடகோபன்சொன்ன
பாடல் ஓர் ஆயிரத்துள்
இவையும் ஓர் பத்தும் வல்லார்
வீடுஇல போகம்எய்தி
விரும்புவர் அமர் மொய்த்தே.

வண்டுகள் ஒன்றுசேர்ந்து சத்தமிடுகிற, குளிர்ந்த மாலையை அணிந்த எம்பெருமான், மேகம்போன்ற வண்ணம் கொண்டவன், எல்லாப் பக்கங்களிலும் மலர்கள் சூழ்ந்த சோலைகள் நிறைந்த வளமான ஊர் குருகூர், அவ்வூரைச் சேர்ந்த வள்ளல் சடகோபன் அப்பெருமானை ஆயிரம் பாடல்களில் பாடினார், அந்த ஆயிரம் பாடல்களில் இந்தப் பத்து பாடல்களையும் பாட வல்லவர்களுக்குப் பிரிவில்லாத மோட்ச வாழ்வு கிடைக்கும், தேவர்களும் அவர்களை விரும்புவார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

பிளஸ் 2: ஆனக்குழி அரசுப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

பள்ளிகளில் உயா் கல்வி வழிகாட்டல் குழு -வட்டார வள மையத்தில் பயிற்சி

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

அச்சுக் காகிதங்களில் பொட்டலமிட்டால் அபராதம்

SCROLL FOR NEXT