நூல் அரங்கம்

தமிழ் இதழியல் கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ் இதழியல் கருத்தரங்கக் கட்டுரைகள் - பெ.சு. மணி; பக். 362; ரூ.175; மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்; )044 - 2536 1039.

பெ.சு.மணி

தமிழ் இதழியல் கருத்தரங்கக் கட்டுரைகள் - பெ.சு. மணி; பக். 362; ரூ.175; மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்; )044 - 2536 1039.

தமிழ் இதழியல் வரலாறு தொடர்பாக 13 கருத்தரங்கங்களில் படிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. 1831-ஆம் ஆண்டு தொடங்கி 1892 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தில் பத்திரிகைகள் உருவான விதம், அதற்கு பிரிட்டிஷார் ஏற்படுத்திய தடைகள், அதையும் மீறி பத்திரிகை சுதந்திரத்துக்காகக் குரல் கொடுத்ததோடு, பத்திரிகைகளைத் தொடங்கி நடத்தியவர்கள் குறித்து இந்நூலில் விரிவான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சுதேசமித்திரன், லோகோபகாரி, ஞானபோதினி, தத்துவபோதினி,திராவிடன், தினமணி உள்ளிட்ட பத்திரிகைகளைப் பற்றியும் அவற்றின் முதல் தலையங்கம் குறித்தும் கூறப்பட்டுள்ளது.

ஜி.சுப்பிரமணிய ஐயர், இதழாளர் சுப்பிரமணிய சிவா, பாரதியார் ஆகியோரின் இதழியியல் கோட்பாடுகள் குறித்த கட்டுரைகள் வியப்பை ஏற்படுத்துகின்றன.

மகளிர் விழிப்புணர்வுக்காக தத்துவ போதினி, அமிர்தவசனி, சுகுணபோதினி, தமிழ் மாது, சக்ரவர்த்தினி ஆகிய இதழ்கள் பெண்களுக்காக ஏற்படுத்தப்பட்டன.

தமிழ் இதழியல் வரலாற்றில் முதன் முதலில் 3 லட்சம் பிரதிகளை விற்று சாதனை படைத்தது சுதந்திரச் சங்கு எனும் பத்திரிகை.

1930 இல் வீறுகொண்டெழுந்த உப்பு சத்யாகிரக இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம் முதலானவை "திரிசங்கு' தோன்றுவதற்கான சூழலை ஏற்படுத்தின.

பாமர மக்களைக் கவரும் வகையில் நாட்டுப் பாடல்களையும், பாமர வழக்குகளையும் நகைப்பூட்டும் கருத்துப் படங்களையும் (கார்ட்டூன்கள்) இதழ்கள் பெருமளவில் பயன்படுத்தியிருப்பதும் தெரிய வருகிறது.

அந்த காலக்கட்டத்தில் வெளிவந்த இதழியல் தொடர்பான படங்கள், முகப்பு அட்டைகள், செய்தித் தாள்கள் குறித்து தகவல்கள் நூலின் பிற்சேர்க்கையில் இடம் பெற்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டைமான்!

திருப்பூர் எஸ்எஸ்ஐ கொலை, கோவை காவல் நிலையத்தில் தற்கொலை! திமுக அரசுக்கு இபிஎஸ் கேள்வி

மத்திய அரசுத் துறைகளில் அதிகாரிப் பணி: யுபிஎஸ்சி அறிவிப்பு

அரசுத் திட்டங்களில் முதல்வர் பெயரை பயன்படுத்தலாம்! சி.வி. சண்முகத்துக்கு அபராதம் - உச்ச நீதிமன்றம்

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.19% எட்டியுள்ளது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

SCROLL FOR NEXT